👉வீட்டிலேயே வளர்க்கலாம் "சுவீட் கார்ன்"
ஆசிரியர் பணிசார்ந்த சேவைகளை இணைய வழியில் பெற செயலி அறிமுகம்
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர்களின் சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு கடந்த மே 25ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்கள் அவர்தம் செல்போன் வாயிலாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் TNSED-Schools (இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி) ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
எனவே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்செயலி மூலம் தங்கள் பணிசார்ந்த தேவைகள், விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment