முகத்தில் தழும்பு நீங்க மருத்துவ குறிப்புகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

முகத்தில் தழும்பு நீங்க மருத்துவ குறிப்புகள்

முகத்தில் தழும்பு நீங்க மருத்துவ குறிப்புகள்

தழும்புகள் பல நாட்களுக்கும் அப்படியே இருக்கும். இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் :

💛💛

முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
மேல் போட்டு வரவும் .

தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
புள்ளி மறைந்து விடும்.

💛💛 

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :

1 - கோபி சந்தனம் - ஒரு தேக்கரண்டி  அளவு
2 - பாதாம் பருப்பு - மூன்று (நீரில் ஊற வைத்தது)
3 - தயிர் - இரண்டு தேக்கரண்டி
4 - எலுமிச்சை சாறு - 2 - தேக்கரண்டி

இவைகளை அரைத்து எடுத்து முகம், கழுத்து பகுதி
களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
பரு ,கரும்புள்ளி, தழும்புகள் நீங்கி முகம் அழகு
பெரும்.

💛💛

முகத்தில் தழும்புகள் - தீப்புண் தழும்புகள் மறைய :

அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்காய் எண்ணையில் விட்டு
குழப்பி வைத்துக் கொள்ளவும்.

இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

🎈🧸🎈

No comments:

Post a Comment