நான் முதல்வன் திட்டம் - உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல் - நடைமுறைபடுத்துதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 21 June 2022

நான் முதல்வன் திட்டம் - உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல் - நடைமுறைபடுத்துதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண்.2818/ஈ1/2021 நாள்.20.06.2022 

பொருள்: 

நான் முதல்வன் திட்டம் - உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல் - நடைமுறைபடுத்துதல் - சார்பு.

பார்வை : 1. மாண்புமிகு சட்டப் பேரவை பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகள் 2021-2022, அறிவிப்பு எண்.10 2. பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டி அட்டவணையின் படி *** 

பார்வை - 1 மற்றும் 2-ல் காண் நான் முதல்வன் திட்டத்திற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியானது முதன்மை கருத்தாளர்களுக்கு மதுரையில் 17.06.2022 மற்றும் 18.06.2022 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 24.06.2022 அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் முதன்மை கருத்தாளர்களால் வழங்கப்படவுள்ளது. 

மேலும். 2021 - 2022ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வழிக்காட்டுதல் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலிருந்தும், மேல்நிலைப் பிரிவுகளில் (11, 12) பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 250 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்சியில் பங்கேற்கச் செய்தல் வேண்டும். 

இது சார்ந்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து பள்ளி  வாரியாக பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை தெரிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இதுசார்ந்து, பயிற்சி நடைபெறும் நாளில் பயிற்சியில் பங்கேற்கத் தக்கவகையில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவித்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி பயிற்சிக்கான கால் அட்டவணையினை பின்பற்றி நடத்திடுமாறும் மேற்படி பயிற்சி அறையில் 40 ஆசிரியர்கள் மட்டும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கலாகிறது. (பயிற்சிக்கான கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.) 

முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பயிற்சி நடைபெறும் மையம் தெரிவு செய்யப்படவேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் மையமானது காற்றோட்டமான இருக்கைவசதி, தொழில் நுட்பவசதி, கழிப்பிடம் மற்றும் குடிநீர்வசதி உள்ளமையமாகவும், ஆசிரியர்கள் எளிதில் சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதியுடைய மையமாகவும் இருத்தல் வேண்டும். மையத்தினை தெரிவு செய்த பின்னர் அதன் விவரத்தினை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். பயிற்சி நடைபெறும் நாட்களில் காலை / மாலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு அளித்திடவும், பங்கேற்பாளர்களுக்கு தற்போதைய நடைமுறையிலுள்ள அரசு விதிகளின்படி பயணப்படியினை அனுமதித்திடவும், இப்பயிற்சிக்கான செலவினத் தொகையினை தங்களது நிறுவன முதுகலை ஆசிரியர்களுக்கான, பயிற்சி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறும், அவ்வாறு நிதி ஒதுக்கீடு இல்லையெனில் தங்களது திட்டம் மற்றும் செயல்பாடுகள் செலவினத் தலைப்பின் கீழ் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

எனவே, இப்பயிற்சியினை சிறப்பான முறையில் திட்டமிட்டு நடத்திடுமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பூமனீஷ் இயக்குநர்சிnக் பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். நகல் - பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்க தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. DOWNLOAD FULL PROCEEDINGS

No comments:

Post a Comment