அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் அழுதபடி வந்த குழந்தைகளை அரவணைத்த ஆசிரியர்கள் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 14 June 2022

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் அழுதபடி வந்த குழந்தைகளை அரவணைத்த ஆசிரியர்கள்

அரசு பள்ளி வளாகங்களில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு தொடக்க கல்வித்துறையின் கீழ் வரும் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சமீபத்தில் அந்த வகுப்புகளை கல்வித்துறை, சமூக நலத்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், இனிமேல் அவர்கள்தான் அதனை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. 


இதையடுத்து தமிழக அரசின் கல்வித்துறை மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தது. அதன்படி, அரசு பள்ளி வளாகங்களில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் நேற்று தொடங்கின. குழந்தைகளை அவர்களின் பெற்றோர் அழைத்துவந்து விட்டு சென்றனர். குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். 

சில குழந்தைகள் ‘ஸ்கூலா... வேண்டாம்... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க...' என்று பெற்றோரிடம் அழுது புரண்டனர். அவர்களை ஆசிரியர்கள் அரவணைத்து, அழைத்து சென்று வகுப்புகளில் அமர வைத்து, அழுகையை நிறுத்தினர்.

No comments:

Post a Comment