மருத்துவ குணங்கள் வாய்ந்த ஆமணக்கு எண்ணெய் !! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 June 2022

மருத்துவ குணங்கள் வாய்ந்த ஆமணக்கு எண்ணெய் !!



மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. 

விளக்கெண்ணெய்யின் சில துளிகளை தினமும் அடிபட்ட புண்களின் மீது விட்டு வந்தால் புண்கள் விரைவில் குணமாகும். தினமும் இரவில் சில துளி விளக்கெண்ணெய்யை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும். 

தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும். ஆர்த்ரைடிஸ் போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். உடலின் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டாலும் அந்த இடம் வீங்கிவிடுகிறது. 

விளக்கெண்ணெய்யின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும். விளக்கெண்ணெய்யின் சில துளிகளை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

No comments:

Post a Comment