மனஅழுத்தம் காரணமாக எந்தெந்த உறுப்புகள் பாதிக்கும் ? - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 16 June 2022

மனஅழுத்தம் காரணமாக எந்தெந்த உறுப்புகள் பாதிக்கும் ?

மன அழுத்தத்தின்போது கார்டிசோல் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடும். 
மன அழுத்தத்தில் இருக்கும்போது நோய்வாய்ப்படுவதற்கான காரணம் இதுதான். மன அழுத்தம் நீடித்துக்கொண்டிருந்தால் வயிற்றில் உள்ள இரைப்பையில் அமிலத்தின் அளவு அதிகரிக்க தொடங்கி விடும். 

இதனால் இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கும். வயிற்றில் புண்களும் உண்டாகக்கூடும். மன அழுத்தம் ஏற்படும்போது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவை இரண்டின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது இதய ஆரோக்கியத்திற்கு கேடாக முடியும். மன அழுத்தத்தின் போது, ​தசைகள் கடினமாகி, தசைப் பிடிப்பு ஏற்படக்கூடும். இதனால் உடல் இயக்கம் பாதிப்புக்குள்ளாகும். மன அழுத்தம் நீடிக்கும்போது சுவாசத்தில் பாதிப்பு நேரக்கூடும். இயல்பை விட அதிகமாக மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்க நேரிடும். மூச்சுத்திணறலை உணரலாம். 
போதுமான ஆக்சிஜன் கிடைக்காத நிலையும் ஏற்படும். மன அழுத்தம் மூளையின் செயல்பாடுகளையும் பாதிக்கும். தூக்க சுழற்சியையும் சீர்குலைத்துவிடும். சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடும் தடுமாற்றமடையும். உடல் ஆரோக்கியத்தைப் போலவே, மகிழ்ச்சியான மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு இது முக்கியமானது. ஆரோக்கியமான மனதுக்கும், உடலுக்கும் சமச்சீர் உணவு முக்கியமானது. 

உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு நிறைய தண்ணீர் பருக மறக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி முக்கிய மானது. பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முக்கியமானது.

No comments:

Post a Comment