என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்குகிறது - EDUNTZ

Latest

Search Here!

Monday, 20 June 2022

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்குகிறது

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்குகிறது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவும் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் 


என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்பதிவை மேற்கொள்ளலாம். பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ரேண்டம் எண் அடுத்த மாதம்22-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். பின்னர் ஆகஸ்டு 8-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வை பொறுத்தவரையில், ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 18-ந் தேதியுடன் அனைத்து விதமான கலந்தாய்வுகளும் (விளையாட்டு, பொதுப்பிரிவு மற்றும் துணை கலந்தாய்வு) நடத்தி முடிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment