எண்ணும் எழுத்தும் திட்டம் : தலைமையாசிரியர்களின் பணிகள்
1) பல்வகுப்புகளைக் கொண்ட வகுப்பறையாக இருப்பின் 1, 2, 3 வகுப்புகளை ஓர்
ஆசிரியர் கற்பிக்கவும் 4, 5 வகுப்புகளை மற்றோர் ஆசிரியர் கற்பிக்கவும் ஏற்றவாறு
ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
2) அனைத்து ஆசிரியர்களும் தனித்தனியாக தமிழ், ஆங்கிலம், கணக்கு எனப்
பாடவாரியாக முதல் பருவத்திற்கான ஆசிரியர் கையேடுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு ஆசிரியருக்கும் எண்ணும் எழுத்தும் கற்றல் பொருள்கள்
அடங்கிய ஒரு தொகுப்பு (Ennum Ezhuthum Kit) வழங்கப்படும்.
4) குழந்தைகள், பேசவும், பாடவும், நடிக்கவும், போலச் செய்யவும் (Enact)
ஏற்றவகையில் ஒரு சிறு மாதிரி மேடை அமைப்பையும் (A Small Dummy Stage) மாதிரி
ஒலிவாங்கியையும் (Dummy Mike) ஒவ்வொரு வகுப்பறையும் கொண்டிருக்க வேண்டும்.
5) ஒவ்வொரு பள்ளியும் 1, 2 மற்றும் 3 வகுப்புகளுக்குப் பெற்றோர் ஆசிரியர்
கூட்டத்தினை ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக நடத்தவேண்டும். இக்கூட்டத்தின்
போது, மாணவருடைய கற்றல் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம்
சார்ந்து ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாட வேண்டும்.
6) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களின் நிகழ்ச்சிப் பட்டியலில் எண்ணும்
எழுத்தும் திட்டத்தின் முன்னேற்றம்/வளர்ச்சி நிலை ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்.
7) ஒவ்வொரு பள்ளியும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாதத்தின் இறுதி
வேலைநாளில் தங்கள் குழந்தைகளின் தனித்திறன்களைக் காட்சிப்படுத்தும்
தனித்திறன் கொண்டாட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
தனித்திறன்கள், பாடம் சார்ந்த, பாடம் சாராதவையாக குழந்தைகளின்
தனித்திறன்களை வெளிக்கொணர் வாய்ப்பு வழங்குவதாக, ஊக்குவிப்பதாக,
திறன்களைக் காட்சிப்படுத்திப் பிற மாணவர்களுக்கு வழிகாட்டுவதாக
அமையவேண்டும். அனைத்துக் குழந்தைகளையும் தனியாகவோ குழுவாகவோ
நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்வது அவசியம்.
No comments:
Post a Comment