எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள்! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 29 June 2022

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள்!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணை செயல்முறைகள், 


சென்னை-06. ந.க.எண்.2411/ஈ2/2020, நாள் 28.06.2022 

பொருள் 

பார்வை தொடக்கக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை 6 எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பெற்றோர் கூட்டத்தில் (Parents Meeting) தெரிவிக்க வேண்டிய தகவல்கள் -சார்பு, 

2021-22ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு. 2. அரசாணை(நிலை) எண். 147, பள்ளிக் கல்வித் (கஆ.ப) துறை, நாள் 21.10.2021. 3. எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள்,

 நாள் 23.06.2022. 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் (Parents Meeting) நடைபெறும்போது 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்தும் மாணவர்களின் கற்றல்நிலை சார்ந்தும் கீழ்க்காணும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
2022-23 ஆம் கல்வியாண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் கல்வியாண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு ஆகும். 

கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. இக்கற்றல் இடைவெளியைக் களைய வகுப்பு நிலையிலிருந்து (Grade Based) வேறுபட்டு கற்றல் நிலை அடிப்படையில் (Level Based) கற்பித்தலை எண்ணும் எழுத்தும் திட்டம் மையப்படுத்துகிறது. 

இதற்காக மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் அரும்பு, மொட்டு, மலர் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. செயல்பாடுகளின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நடைபெறும். இதற்காக கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கையேடும் உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. 
வகுப்பறைகளில் பாடங்களுக்கேற்றவாறு கற்றல் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் கல்வித் தொலைக்காட்சியில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மதிப்பீடு (Baseline Survey) இக்கல்வியாண்டின் தொடக்கத்தில் 2 மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்நிலையை அறிதலுக்கான மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டின் மூலம் அறியப்பட்ட குழந்தையின் கற்றல்நிலையைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். 

இக்கற்றல் நிலையிலிருந்து மாணவர் எந்தநிலைக்கு முன்னேற்றப்படுவார் என்பதனை தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று அவ்வாரத்தில் கற்பிக்கப்பட்ட பாடப்பொருள்களில் மாணவர்கள் அடைந்த கற்றல் விளைவு குறித்து அறிய வளரறி மதிப்பீடு (Formative Assessment) மேற்கொள்ளப்படும். பருவ இறுதியில் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment ) மேற்கொள்ளப்படும். 
இம்மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல்நிலை குறித்து பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்றுக் கற்பதைப் பெற்றோர்கள் அறியும்வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்குக் காட்சிப்படுத்த வேண்டும். 

குழந்தைகளின் தனித்திறன்கள் வகுப்பறையில் ஊக்குவிக்கப்படுவது குறித்து விளக்கிக் கூறுவதோடு குழந்தைகளின் திறன்களைப் பெற்றோர் காணும்வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மேற்கண்ட கருத்துகளை முதன்மைப்படுத்தி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) வகுப்பு வாரியாக பெற்றோர் கூட்டம் (Parents Meeting) நடத்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தொடக்கக்கல்வி இயக்குநர், 

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்டங்களின் மாவட்டக் கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள். 

No comments:

Post a Comment