அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ள மாணவிகள் தங்களுடைய விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 30.6.2022 (நேற்று) -க்குள் விவரங்களை பதிவேற்ற உயர்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வருகிற 10-ந்தேதிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய கூறியிருக்கிறது.
Search Here!
Friday, 1 July 2022
New
மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற மாணவிகள் விவரங்களை பதிவு செய்துகொள்ள அவகாசம் நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment