வாக்காளர் பட்டியலில் சேர 17 வயதிலேயே விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 30 July 2022

வாக்காளர் பட்டியலில் சேர 17 வயதிலேயே விண்ணப்பம்: தேர்தல் ஆணையம்

இந்தியாவில் 18 வயதை கடந்த பிறகே வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே, ஜனவரி 1ம் தேதி தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய முடியும். ஜனவரி 1க்குப் பிறகு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை ஓராண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. 

இந்நிலையில், தேர்தல் சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம், ஆண்டுக்கு 4 முறை இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், 17 வயது நடந்து கொண்டிருக்கும் போதே வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க முன்கூட்டியே பதிவு செய்யலாம் என்ற புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 17 வயது நடக்கும் போதே இளைஞர்கள் முன்கூட்டியே வாக்காளராக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கும்படி, அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் அது உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 18 வயதை அடைபவர்கள், வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment