தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நல இயக்ககம்
முதல் தளம், கலச மஹால், சேப்பாக்கம், சென்னை - 5
|மாவட்ட அளவிலான
| உதவிக்கு தொடர்பு அலுவலர்
மாநில அளவிலான உதவிக்கு /
புகார்களுக்கான தொடர்பு அலுவலர்
செ.ம.தொ.இ./777 /வரைகலை/2022
DE CHEER
பி1 / 2947 / 2022
நாள்: 25.07.2022
சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு,
பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான
கல்வி உதவித் தொகை வழங்குதல் 2022-23
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்,
கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த இந்திய/மாநில அரசு,
அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும்
மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு (1 ஆம் வகுப்பு முதல்), பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி
மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு
www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையம் (NSP) மூலம்
வரவேற்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார
அமைச்சகத்தால் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில்
நேரடியாக செலுத்தப்படும்.
புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை வேண்டி மாணவ,
மாணவியர் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் பள்ளி படிப்பு கல்வி
உதவித்தொகைக்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் கல்வி
உதவித்தொகை திட்டங்களுக்கு 31.10.2022 வரையிலும் விண்ணப்பிக்கலாம். திட்ட வழிகாட்டி
முறைகள், இலக்கீடு, தகுதிகள், விதிமுறைகள் (ம) நிபந்தனைகள் மாணவர்/கல்வி
நிலையங்களுக்காக அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQ), இணையம் செயல்படும்
முறை (ம) 2022-23ஆம் ஆண்டில் இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் ஆகியவைகள்
மேற்காணும் இணைய தளத்தில் தரப்பட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு: தகுதி மற்றும் வருவாய் கல்வி
உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான படிப்புகளின் விவரங்களை
www.minorityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.
தகுதியுள்ள அனைத்து கல்வி நிலையங்களும் இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பங்குபெற
கல்வி நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் கல்வி நிலைய தலைவர் ஆதார்
விவரங்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்கப்பட வேண்டியது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சிர் வளாகத்தில் அமைந்துள்ள
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக்கெள்ளப்படுகிறது.
SOLV
CHEWA
20170
மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (District Nodal
Officer), மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மாவட்ட வாரியான தொலைபேசி (ம) மின்னஞ்சல் விவரங்கள்
|NSP இணையத்தில் 'Service" என்ற பிரிவில் அறிந்து
கொள்ளலாம்.
" சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்"
| மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் (State Nodal Officer),
சிறுபான்மையினர் நல இயக்ககம், கலச மஹால், முதல் தளம்,
| சேப்பாக்கம், சென்னை - 5.
| மின்னஞ்சல் - nspnodal.mwtn@gov.in
இயக்குநர்,
சிறுபான்மையினர் நலம்
No comments:
Post a Comment