இயற்கையோடு இணைந்திருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே, ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை செலவழிக்கும் பணியிடங்கள், பசுமையாக இருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம், பணியாற்றுபவர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தற்போது பல அலுவலகங்களில் சிறிய தோட்டம் அமைத்து பராமரிக் கின்றனர்.
ஊழியர்கள் அந்த இயற்கைச் சூழ் நிலையில் சிறிது நேரம் செலவழிப்பதன் மூலம், உற்பத்தி திறன் அதிகரிப்பதாக கூறுகின்றனர். அத்தகைய அலுவலக தோட்டம் மற்றும் செடிகளை சிறப்பாக பராமரிப் பதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம். அலுவலக தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகள் விரைவாக வளரும் தன்மையுடன் இருக்க வேண்டும். களைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும், அவை வளரும் இடத்தைக் குறைக்கவும், பாத்திகளை அடர்த்தியாக அமைக்க வேண்டும். செடிகளுக்கு தக்க சமயத்தில் ஏற்ப தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். தண்ணீர் ஊற்றும்போது இலைகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி நீர்படுவதால் எளிதில் இலைகள் அழுகிவிடும் வாய்ப்பு உள்ளது.
மாலை அல்லது அதிகாலை நேரங்களில், தண்ணீர் குறைவாக ஆவியாவதால் மண் குளிர்ச்சியாக இருக்கும். அப்போது தாவரங்களுக்கு தண்ணீர் விடுவது சிறப்பான பலனை தரும். மண்ணின் ஈரப்பதத்தை சீராக பராமரிக்க, வெயில் காலங்களில் புற்களை உயரமாகவும், குளிர் மற்றும் மழைக்காலங்களில் புற்களை உயரம் குறைவாகவும் பராமரிக்க வேண்டும்.
இதன் மூலம் செழிப்பான சுற்றுப்புறத்தை அமைக்க முடியும். வெளிப்புறத்தில் மட்டுமில்லாமல், ஊழியர்களின் அறைகளை சுற்றியும் தோட்டம் அமைத்தால் தோட்டப் பராமரிப்பில் அவர்களின் பங்கீடு அதிகரிக்கும். தோட்டத்தின் முக்கி யத்துவத்தை ஊழியர்களுக்கு உணர்த்தி ஆர்வத்தை அதிகப் படுத்தினால், தோட்டம் இன்னும் சிறப்பாக பராமரிக்கப்படும். ஊழியர்கள் அறையை சுற்றி செடிகள் அமைப்பதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும். ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை உருவாக்கும். இதனால் மகிழ்ச்சியான மனநிலையுடன் ஊழியர்கள் பணியாற்ற முடியும்.
No comments:
Post a Comment