பள்ளிக்கல்வி துறையின் டிஜிட்டல் பிரிவான, 'எமிஸ்' செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை நடத்தினார். எமிஸ் என்ற கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில், மாநிலம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல்கள், பள்ளிகளின் உள் கட்டமைப்பு, பள்ளி நிர்வாக நடைமுறைகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எமிஸ் செயல்பாடுகளில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. 


இதனால், பள்ளிக்கல்வி அலுவலகங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையை மாற்ற, எமிஸ் செயல்பாடுகளை தரம் உயர்த்துவது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார், சமக்ரசிக் ஷா மாநில திட்ட இயக்குனர் சுதன், இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, எமிஸ் செயல்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும். 
அதற்கு தேவையான தொழில்நுட்ப ஊழியர்களை நியமித்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். எமிஸ் தளத்தில் உள்ள டேட்டாக்கள், எந்த வழியிலும் தனியாருக்கோ, வேறு துறைக்கோ கசிந்து விடாமல், மாணவர்களின் சுய விபரங்களை பாதுகாக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!