இனி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது ஓடிபி கட்டாயம்.! 

எஸ்பிஐ வங்கியில் இனி வாடிக்கையாளர் ஏடிஎம்-ல் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஓடிபி(OTP)எண் வரும். அந்த எண்ணை போட்ட பிறகே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் மற்றொரு முறை பணம் எடுக்க விரும்பினால், அப்போது வாடிக்கையாளர் மொபைல் எண்ணிற்கு வேறொரு ஓடிபி எண் வரும். 
அந்த ஓடிபி எண்ணை ஏடிஎம் மிஷின்-ல் பதிவு செய்த பிறகே வடிக்கையாளரால் பணம் எடுக்க முடியும். இப்படி ஓடிபி எண்ணை வைத்து பண பரிவர்த்தனை செய்வதன் மூலம், சைபர் குற்றங்களை குறைக்க இயலும் என்றும், மர்ம நபர்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்வது தடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!