தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை
கோவை தபால்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கோபா
லன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு தபால் துறை சார்பில்
தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த திட்டமானது கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்ப
டுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதியாண்டிற்கான
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்
ணப்பிக்கும் மாணவர்கள் தபால் தலை சேகரிக்கும் சங்க உறுப்பின
ராகவோ, தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ
இருக்க வேண்டும்.
இதில், மண்டல அளவில் வினா விடை தேர்வு
நடைபெறும். இதில் தேர்வு பெறும் மாணவர்கள் 2-ம் கட்டமாக தபால்
தலை சேகரிக்கும் புரோஜக்ட்-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
யாக வழங்கப்படும். மேலும் கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய www.tamilnadupost.in என்ற இணையதளத்தை
அணுகவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் துறை
தலைவர், மேற்கு மண்டலம், கோவை-641002 என்ற முகவரிக்கு
வருகிற 29-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment