மனமாற்றம் தரும்
வார்த்தைகள்
நம் செயல்பாடுகளுக்கும், சிந்தனைக்கும்,
மனமாற்றத்துக்கும் சிறு வார்த்தையே தூண்டு
தலாக இருக்கும். எப்போதும், எந்தச் சூழலிலும்
நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் முக்கிய
மானவை. 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்'
என்ற பொன்மொழிக்கு ஏற்ப, நல்லதாக நாம்
கூறும் சிறு வார்த்தை, மிகப்பெரிய எதிர்மறை
செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் சக்தி
கொண்டது.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம்
பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகம், அவர்
களின் மனநிலையை எளிதில் மாற்றக்கூடியவை.
ஏதேனும் ஒரு சிறு முயற்சியில் ஈடுபடும் பலரும்,
'நான் நினைக்கும் காரியம் எப்போதும் நிகழாது;
அவற்றுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து
வைத்தாலும் நினைத்தபடி நடக்காது' என்று கூறு
வதுண்டு. இவர்கள் எளிதில் எதிர்மறை மன
நிலைக்கு வந்து விடுவார்கள். அப்படியானவர்
களைச் சுற்றி எப்போதும் நேர்மறையான வார்த்தைப்
பயன்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும், நாம் பயன்
படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
நமது வார்த்தைகளைக் கேட்டு குழந்தைகள்
வளர்கிறார்கள். கேட்கும் அனைத்து வார்த்தை
களும், அவர்களின் மனதில் எளிதில் பதிந்துவிடும்.
பின்னர், அவையே அவர்களின் இளமை காலத்
தையும் வழி நடத்தும். ஆகையால், நல்லதைப்
பேசுவோம், நல்வாழ்வு வாழ்வோம்.
No comments:
Post a Comment