காம்பினேஷன் சருமத்துக்கான பராமரிப்பு முறைகள் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 5 July 2022

காம்பினேஷன் சருமத்துக்கான பராமரிப்பு முறைகள்

சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரந்து, எப்போதும் எண்ணெய் பசையோடு இருக்கும் சருமத்தை 'ஆயில் சருமம்' என்கிறோம். மிகவும் குறைவான எண்ணெய் பசை கொண்ட சருமத்தை 'வறண்ட சருமம்' எனக் கூறுகிறோம். இவை இரண்டும் கலந்த கலவை தான் 'காம்பினேஷன் சருமம்'. இவ்வகை சருமம் கொண்டவர்களுக்கு பெரும்பாலும் 'T' சோன் என்று அழைக்கப்படும் இடமான நெற்றி, மூக்கு மற்றும் சில இடங்களில் அதிக எண்ணெய் பசையோடும், இரண்டு கன்னங்களிலும் எண்ணெய் பசை இல்லாமல் சருமம் வறண்டும் காணப்படும். 
காம்பினேஷன் சருமம் ஏற்படுவதற்கு பருவகால மாற்றமும், மரபியலும், ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றமும் காரணமாகும். அறிகுறிகள்: நெற்றி மற்றும் மூக்குப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும். கன்னம், தாடை பகுதிகள் வறண்டு காணப்படும். முகப்பருக்கள் அடிக்கடி உண்டாகும். 

மூக்கு, நெற்றி மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள சருமத் துளைகள் பெரியதாக இருக்கும். மேக்கப் போட்ட சிறிது நேரத்திலேயே, முகம் முழுவதும் திட்டுத் திட்டாக காட்சியளிக்கும். சருமம் கோடைகாலத்தில் அதிக எண்ணெய் பசையோடும், குளிர்காலத்தில் மிகுந்த வறட்சியோடும் இருக்கும். Also Read - குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் பராமரிப்பு: காம்பினேஷன் சருமத்தை பாதுகாப்பதற்கு காலை, இரவு என இரண்டு நேரங்களுக்கும் தனித்தனியான பராமரிப்பு முறைகள் உண்டு. அவை: 
காலை: 

1. முதலில் 'கிளென்சர்' எனப்படும் கிரீமை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் 'டோனர்' கொண்டு முகத்தில் மீதமுள்ள எண்ணெய்த் தன்மையை நீக்க வேண்டும். இதன்மூலம் சருமத்தின் அமில-கார சமநிலை பாதுகாக்கப்படும். இதற்கு ஆல்கஹால் கலக்காத டோனரை உபயோகிப்பது நல்லது. 

2. மேக்கப் பொருட்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். காம்பினேஷன் சருமத்திற்கு லேசான அழகு சாதனப் பொருட்கள் ஏற்றதாக இருக்கும். பவுண்டேஷன் மற்றும் கன்சீலரை, எண்ணெய் இல்லாத கலவையாகப் பார்த்து வாங்க வேண்டும். 

இரவு: 

1. மேக்கப் போட்டு இருந்தால், மேக்கப் ரிமூவர் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். மைக்கேலர் நீர் (பல்நோக்கு தோல் பராமரிப்பு மாய்ஸ்சுரைசர்) இதற்குப் பயன்படுத்தக்கூடிய மென்மையான தயாரிப்புகளில் ஒன்றாகும். 

2. சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றி, ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும். இதற்காக சமையல் சோடா, நன்றாக அரைத்த சர்க்கரை, காபி, பாதாம், ஓட்ஸ், லவங்கப்பட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம். 
பொதுவான பராமரிப்பு முறைகள்: 

1) சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 2) எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு ஏற்றவாறு பல அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. உங்கள் முகத்தில் எந்தப் பகுதியில் எந்தவித சருமம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்றவாறு தனித்தனியே இந்தப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். 

No comments:

Post a Comment