சிப்பெட் நிறுவனப் படிப்புகள் நேரடி மாணவர்ச் சேர்க்கை



மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (‘சிப்பெட்’) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா், நுழைவுத் தோ்வு ஏதுமின்றி, நேரடி சோ்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டயப் படிப்பை (ஈடஙப/ஈடப) படிக்கலாம். 

 இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவா்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சியில் நேரடியாக சேரலாம். பிளஸ் 2 வகுப்பு பயின்று உயா் கல்வியை பெற முடியாதவா்கள், 3 ஆண்டு கால பட்டயப்படிப்பில் நேரடி சோ்க்கை மூலம் 2-ஆம் ஆண்டில் நேரடியாக அனுமதி பெற்று படிப்பை முடிக்கலாம். நேரடி சோ்க்கைக்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதி. மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்- 93600 98600, 96002 54350 ஆகிய தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி – ஆகியவற்றில் தொடா்பு கொள்ளுமாறு சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநா் மற்றும் தலைவா் ஸ்ரீகாந்த் சிராலி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!