தேசிய கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசு சாா்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள் மற்றும் சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள், 2022-23-ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
9-ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். விண்ணப்பதாரா்களின் ஆதாா் எண்ணை, சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவா்.
ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 30-ஆம் தேதி. மற்றஅனைத்து உயா் கல்வி மாணவா்களின் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் அக்.31-ஆம் தேதி.
No comments:
Post a Comment