மலையின் உச்சிப்பகுதி ஏன் குளிர்கிறது?.. தரைப்பகுதி சுடுவதற்கு என்ன காரணம்? தகவல் இதோ...! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 26 July 2022

மலையின் உச்சிப்பகுதி ஏன் குளிர்கிறது?.. தரைப்பகுதி சுடுவதற்கு என்ன காரணம்? தகவல் இதோ...!

மலையின் உச்சிப்பகுதி ஏன் குளிர்கிறது?.. தரைப்பகுதி சுடுவதற்கு என்ன காரணம்? தகவல் இதோ...! தரைப்பகுதிக்கும், மலையின் உச்சி பகுதிக்கும் வெவ்வேறான வெப்ப அளவு இருக்கிறது. அது எதனால்? என்று பார்ப்போம். முதலில் நமது வளிமண்டலம் குறித்து பார்ப்போம். வளிமண்டலத்தில் 5 அடுக்குகள் உள்ளன. வவை troposphere, stratosphere, mesosphere, thermosphere மற்றும் exosphere ஆகும். troposphere, 15 கிமீ வரை இருக்கும். stratosphere 50 கிமீ, mesosphere 80 கிமீ, thermosphere 500 கிமீ வரையும் இருக்கின்றன. thermosphere-க்கு மேல் செல்ல செல்ல வெப்பநிலை அளவு குறைந்துகொண்டே செல்லும். 
அதாவது, 1000 மீட்டருக்கு 6.5 டிகிரி செல்சியஸ் குறைகிறது. இந்த வெப்பநிலை குறைவு எதனால் நிகழ்கிறது? என்று பார்ப்போம். நாம், தற்போது ஒரு பெரிய காற்றுக்கடலின் அடிப்பகுதியில் இருக்கிறோம். எனவே, 1.014 bar pressure-ஐ உணர்கிறோம். பூமிக்கு வெப்பம் எப்படி கிடைக்கிறது என்று தெரிந்துகொள்வோம். உதாரணமாக, சூரியனிலிருந்து 100 unit வெப்பம் பூமிக்கு வருகிறது, எனில் அது, incoming solar radiation எனப்படுகிறது. அதில் 51% மேகங்கள் மற்றும் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு வெளியில் சென்றுவிடும். மீதமுள்ள 49% வெப்பம் தான், பூமிக்கு கிடைக்கிறது. 


அந்த வெப்பம் முழுமையாக தரையை வந்தடையும். அந்த தரை தான் நமக்கு அதிக வெப்பநிலையை உணர செய்யும். இதனை, Terrestrial Radiation. எனவே, தரையில் இருக்கும், நம்மை வெப்பம் அதிகமாக தாக்கும். அதே நேரத்தில், 1000m உயரம் கொண்ட மலையில் இருக்கும் நபருக்கு குறைவான வெப்பநிலை கிடைக்கிறது. தரையிலிருந்து , மேலே செல்ல செல்ல வெப்பநிலையானது படிப்படியாக குறைய தொடங்குகிறது. இதனால், Terrestrial Radiation, மேலே குறைவாக இருக்கிறது. 
 மேலும், மேல் பகுதியில் அழுத்தம் குறைவாக இருப்பதோடு காற்றும் விலகி இருக்கும். இதனால், விரைவில் அங்கு வெப்பம் உணரப்படுவதில்லை. இதன் காரணமாக தான், மலைப்பகுதிகளில் இருக்கும் நபர்களுக்கு வெப்பநிலை குறைவாக இருக்கிறது.

No comments:

Post a Comment