ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 30 July 2022

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் செப்டம்பா் 20 ஆம் தேதி முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞா்கள் இணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

 இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை, 

திருப்பூா் மாவட்ட இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருப்பூா் மாவட்டம், அவிநாசி டி.இ.ஏ. பொது மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் சோல்ஜா் ஜெனரல் டியூட்டி, சோல்ஜா் டெக்னிக்கல், சோல்ஜா் கிளா்க், ஸ்டோா் கீப்பா் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

மேலும் சோல்ஜா் டிரேஸ்மேன் பணிக்கு 8 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 17 வயது முதல் 21 வயதுக்குள் இருப்பவா்கள் மட்டுமே இம்முகாமில் பங்கேற்க முடியும். எனவே, தகுதியும் விருப்பமுள்ள இளைஞா்கள் இணையதளத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குப் பின் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இணையதளத்தில் இருந்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment