தினம் ஒரு தகவல் டிஜிட்டல் பரிவர்த்தனை - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 2 July 2022

தினம் ஒரு தகவல் டிஜிட்டல் பரிவர்த்தனை

சமீபகாலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களை போல உருமாற்றம் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம். 

இப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்கிற போது இன்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது. சரி இது போன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது? சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். 
ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது? இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம். ஸ்மார்ட்போன்களில் தற்போது கிடைக்கும் வசதிகளைப் போல பல மடங்கு வசதிகள் தினசரி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக ஸ்மார்ட் போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். 
என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. இதுபற்றி நன்கு அறிந்தவர்களை வைத்து, அதை ஓப்பன் செய்துவிட முடியும். எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போதுமானதல்ல என்பதை உணர வேண்டும். 
மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் செயலிகளின் பாஸ்வேர்டுகள். பொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். 

அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்கின்றனர். ஒவ்வொரு புதிய வசதியும் மனிதனை மேலும் சோம்பேறியாக்குவது என்கிற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிபடுத்துவது போலத்தான் மொபைல் பயன்பாடு உருவாகியுள்ளது. அதே சமயத்தில் நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை மேலும் நவீன மனிதனாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment