தினம் ஒரு தகவல் நெடுஞ்சாலைகளின் நடுவே அரளிச்செடிகள் வளர்ப்பது ஏன்? - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 19 July 2022

தினம் ஒரு தகவல் நெடுஞ்சாலைகளின் நடுவே அரளிச்செடிகள் வளர்ப்பது ஏன்?

நெடுஞ்சாலைகளின் நடுவே அரளிச்செடிகள் வளர்ப்பது ஏன்? 

நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுவாயு, காற்று மண்டலத்தை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணம் செய்வோருக்கு சுவாசகோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இந்த நச்சுக்காற்றை கட்டுப்படுத்த. சாலையின் நடுவே செவ்வரளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. 
 செவ்வரளிச்செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுக்களை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

மேலும், இவை வறட்சியை தாங்குவதுடன், மண் அரிப்பையும் தடுக்கும் தன்மை கொண்டவை. வாகன இரைச்சலை குறைக்கும் ஆற்றலும் இந்தச்செடிகளுக்கு உண்டாம்.
எதிர்ப்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் வாகன ஓட்டிகளை அதிகம் பாதிக்காதவாறு தடுக்கும் தன்மையும், இந்தச்செடிகளுக்கு உள்ளதாக கூறுகிறார்கள். அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை. மேலும் இவற்றை பராமரிக்கும் செலவும் குறைவு. 

 விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் இலைகளை உண்ணாது என்பது இயற்கையின் விதி. அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகள் நடுவே இதைக் காணமுடிகிறது. நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் செழித்து வளரக்கூடியவை. இதை சரிவர பாதுகாத்து வருவது அவசியம். ஒரே அளவில் வளர்ந்ததாக இருக்க வேண்டும். அதிகமாக வளர்ந்தால் மக்கள் சாலையைக் கடக்கும்போது விபத்துகள் நேரலாம். அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டு், பராமரிக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment