வயர்லெஸ் சார்ஜிங் எவ்வாறு வேலை செய்கிறது?..... உங்களுக்கு தெரியுமா?..... தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க....!!!! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 26 July 2022

வயர்லெஸ் சார்ஜிங் எவ்வாறு வேலை செய்கிறது?..... உங்களுக்கு தெரியுமா?..... தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க....!!!!

நாம் தற்போது செல்போன்களில் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடிகின்றது. அதாவது மின்சாரத்தை பயன்படுத்தி செல்போன்களில் வயர் எதுவும் இணைக்காமல் நம்மால் சார்ஜ் செய்ய முடிகின்றது. இது எப்படி வேலை செய்கின்றது. இதனுடைய தொழில்நுட்பம் என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். 

வயர்லெஸ் சார்ஜிங் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு சில அடிப்படையான விஷயங்கள் உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு காப்பர் வயரை எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் மின்சாரத்தை பாய்ச்சினால் அந்த காப்பர் வயரை சுற்றி ஒரு காந்த சக்தி உருவாகும். அதாவது எலக்ட்ரோ மேக்னடிக் எஃபெக்ட் என்று கூறுவார்கள் அல்லது மின்காந்தம் என்று அழைப்பார்கள். 
இந்த காந்த சக்தி அந்த காப்பர் வயரில் ஒரு இடத்தில் மட்டும் உருவாகாது அந்த மின்சாரம் எங்கெங்கெல்லாம் செல்கின்றதோ அந்த எல்லா இடத்திலும் காந்த சக்தி உருவாகும். இதுவே இந்த காயிலை ஒரு வளையம் போன்று சுற்றிக்கொண்டு அதன் பிறகு மின்சாரத்தை பாய்ச்சினால் அந்த காப்பரை சுற்றி உருவாகக்கூடிய மின்காந்த சக்தி அதன் மையத்தில் ஒன்றிணையையும். இதுவே ஒரு வளையம் இல்லாமல் பல வளையங்களாக நீங்கள் சுற்றி அதில் மின்சாரத்தை பாய்ச்சினால் அந்த மையத்தில் ஒன்று சேரும் மின்காந்த சக்தி ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். 


இந்த முறையில் நீங்கள் ஒரு எலக்ட்ரிக் கரண்டை மின்காந்த சக்தியாக எலக்ட்ரோ மேக்னடிக் எஃபெக்ட் மூலமாக மாற்ற முடியும். இதுவே ஆப்போசிட் ஆக அதாவது முதல் பாயிண்டில் ஒரு காப்பரில் மின்சாரத்தை பாய்ச்சி அதை சுற்றி மின்காந்தத்தை உருவாக்கினோம். இரண்டாவது ஒரு காப்பர் வயரை எடுத்துக் கொண்டு அதனை வளையம் போன்று சுற்றி அதனை கொண்டு சென்று முதல் காப்பர் வயருக்கு நடுவில் வைக்கிறோம். அப்போது என்ன ஆகும் என்றால் அங்கு உருவாகும் மின்காந்த சக்தி இரண்டாவது காயினில் உருவாகும் சக்தியை உள்வாங்கி மின்சாரத்தை வெளிவிடும். 

இதைத்தான் நாம் எலக்ட்ரோ மேக்னடிக் இன்டக்சன் என்று கூறுவார்கள். இந்த முறை மூலமாக தான் ஒரு டிவைஸ் மூலமாக மற்றொரு டிவைஸ்க்கு மின்சாரத்தை எந்த ஒரு வயரும் இல்லாமல் பாஸ் பண்ண முடியும். இதே தொழில்நுட்பம் தான் செல்போன் வயர்லெஸ் சார்ஜிங் முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதை இண்டக்டிவ் சார்ஜிங் என்று கூறுவார்கள். மின்சாரத்தில் இரண்டு வகை உள்ளது. ஏசி மற்றும் டிசி. செல்போன்களில் உள்ள பேட்டரி ட்ரிபிள் ஏ மற்றும் டபுள் ஏ பேட்டரி எல்லாம் வரும். 

 இதில் வரும் மின்சாரம் அனைத்தும் டிசி மின்சாரமாக இருக்கும். இதுவே வீட்டில் இருக்கக் கூடிய மின்சார போர்டில் மாட்டக்கூடிய பியூஸ் கேரியர் இவை அனைத்தும் ஏசி மின்சாரமாக இருக்கும். இந்த இரண்டு மின்சாரத்தையும் ஒரு காப்பர் காயிலில் செலுத்தும் போது ஒரு மின்காந்த அலை உருவாக்குகிறது. ஆனால் அப்படி உருவான மின்காந்தத்தை வைத்து மற்றொரு காயிலில் எலக்ட்ரோ மேக்னடிக் மின்காந்த மூலமாக மின்சாரத்தை உருவாக்க முடியுமா? என்று கேட்டால் டிசி கரண்ட் மூலமாக உருவாக்க முடியாது .ஆனால் ஏசி மின்சாரம் மூலமாக மட்டும்தான் இதை உருவாக்க முடியும். அதேபோன்று எலக்ட்ரோ மேக்னடிக் இன்டக்சன் மூலமாக மற்றொரு காயிலில் உருவாக்கும் மின்சாரம் ஏசி மின்சாரமாக தான் இருக்கும். தற்போது நாம் செல்போனில் எப்படி வயர்லெஸ் சார்ஜர் வேலை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம். 

செல்போன்களில் பயன்படுத்தப்படும் சார்ஜர்கள் அனைத்தும் கியூ ஐ ஸ்டாண்டர்ட் என்ற முறையை பயன்படுத்துவார்கள் . கியூ ஐ என்றால் எலக்ட்ரோ மேக்னடிக் இன்டக்சன் மூலமாக வயர்லெஸ்ஸை சார்ஜ் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் பெயர். இதனை 2008 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். இந்த முறையை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யும் வயர்லெஸ் சார்ஜ் மூலமாக மார்க்கெட்டுக்கு வந்த செல்போன் என்ன என்றால் நோக்கியா லூமியா 920. இதனை 2012 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்தனர். அதை தொடர்ந்து கியூ ஐ ஸ்டாண்டர்டை வைத்து ஆப்பிள், சாம்சங், ஜியோமி போன்ற பல முன்னணி செல்போன்கள் தங்களது செல்போன்களில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார்கள். இந்த வயர்லெஸ் சார்ஜ் ஒரு பேட் போன்று இருக்கும். 

அதுதான் வயர்லெஸ் சார்ஜ் சாதனம் என்று கூறுவார்கள். அந்த சாதனத்தை நாம் பிளக்கில் கனெக்ட் செய்து வைத்திருப்போம். அதன் மீது செல்போனை வைக்கும் போது நமக்கு செல்போன்களில் சார்ஜ் ஏற ஆரம்பிக்கும். நாம் முன்பே கூறியது போல அந்த பேட் போன்ற அமைப்பில் காயில் போன்ற அமைப்பு இருக்கும். தற்போது மின்சாரத்தில் இருந்து வரும் ஏசி கரண்ட் ஆனது அந்த காயில் மீது பட்டு காந்த சக்தியை உருவாக்கி தரும். அதே போன்று செல்போனில் இருக்கும் பேட்டரியிலும் ஒரு ரிசீவர் கிட்டு இருக்கும். அதிலும் ஒரு காயில் இருக்கும். அந்த போனை நாம் சார்ஜிங் பேட் மேல் வைக்கும் போது அந்த இரண்டு காயில்களுக்கும் இடையே ஏற்படும் கூடிய எலக்ட்ரோ மேக்னடிக் இன்டக்சன் மூலமாக செல்போன் சார்ஜாக ஆரம்பிக்கின்றது. 

நாம் கூறியது போன்று இந்த சார்ஜில் உருவாகக்கூடிய கரண்ட்டானது ஒரு ஏசி கரண்ட் ஆக தான் இருக்கும். ஆனால் நமது செல்போன்களில் டிசி கரண்ட் மூலமாகத்தான் சார்ஜிங் செய்ய முடியும். இதனால் நமது செல்போன்களில் ரிசீவருடன் சேர்த்து ஒரு டிசி டு ஏசி டிவைஸ் இருக்கும். இதன் மூலமாக தான் உங்களது செல்போன்கள் சார்ஜ் செய்யப்படுகின்றது. இந்த வயர்லெஸ் சார்ஜ் மூலமாக நாம் சார்ஜ் செய்யும் போது நமது செல்போனுக்கும் அந்த பேடுக்கும் இடையே உள்ள தொலைவு நான்கு சென்டிமீட்டருக்கும் குறைவாக தான் இருக்க வேண்டும். 

4 சென்டிமீட்டருக்கு அதிகமாக இருந்தால் சார்ஜிங் வேலை செய்யாது. அனைத்து செல்போன்களிலும் இந்த வயர்லெஸ் பியூச்சர் இருக்குமா என்று கேட்டால் அதுதான் இல்லை. உங்களது செல்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் முறை இருக்கா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் https://www.gsmarena.com என்ற லிங்கை கிளிக் செய்து அதன் பிறகு பேட்டரி செக்ஷனுக்கு சென்றால் அங்கு உங்களது செல்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் முறை இருக்கா இல்லையா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment