10 ஆம் வகுப்பு - தமிழ் - முதல் பருவத்தேர்வு - ஆகஸ்ட் 2022 ANSWERS - EDUNTZ

Latest

Search here!

Thursday, 11 August 2022

10 ஆம் வகுப்பு - தமிழ் - முதல் பருவத்தேர்வு - ஆகஸ்ட் 2022 ANSWERS

10 ஆம் வகுப்பு - தமிழ் - முதல் பருவத்தேர்வு - ஆகஸ்ட் 2022 ANSWERS

10 - ஆம் வகுப்பு  - தமிழ்

முதல் இடைப் பருவத் தேர்வு - 2022

பகுதி -I                                                                                                                                             7X 1 = 7

அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் எழுதவும்.                  
1 ) பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர்-------

அ) தாமோதரனார்

ஆ) தேவநேயப் பாவாணர் 

இ) இளங்குமரனார்

ஈ ) வரதராசனார்

விடை : இ ) இளங்குமரனார்

2 ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலகமாநாடு நடத்திய முதல் நாடு ------

அ) சிங்கப்பூர்             ஆ) மலேசியா

இ அமெரிக்கா             ஈ ) லண்டன் 

விடை : ஆ ) மலேசியா

3 ) சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப் பெற்றவர்

அ) பாரதிதாசன்    ஆ) பாரதியார்

இ ) கவிமணி         ஈ ) வைரமுத்து

விடை : ஆ ) பாரதியார்

4 ) உறுதுயர் இலக்கணக் குறிப்புத் தருக.

அ) பண்புத்தொகை

ஆ) வேற்றுமைத்தொகை

இ ) அன்மொழித்தொகை 

ஈ ) வினைத்தொகை

விடை : ஈ ) வினைத்தொகை

பின்வரும் வரும் பாடலைப் படித்து 5, 6, 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்.


நும்இல் போல நில்லாது புக்கு

                கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட்புலம்பு அகல இளிய கூற

           பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு

கரூஉக்கண் கிறடிப் பொம்மல் பெறுகுவீர்

5 ) இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) தமிழ்விடு தூது

ஆ) காசிக்காண்டம் 

இ ) மலைபடுகடாம் 

ஈ) முல்லைப் பாட்டு

விடை : இ ) மலைபடுகடாம்

6 ) கெழீஇ --------- இலக்கணக் குறிப்பத் தருக.

அ) செய்யுளிசை அளபெடை

ஆ ) சொல்லிசை அளபெடை

இ) இன்னிசை அளபெடை

விடை : ஆ ) சொல்லிசை அளபெடை

7 ) பொம்மல் - பொருள் கூறுக.

அ ) சோறு      ஆ ) சுற்றம் 

 இ )  பள்ளம்     ஈ ) கூத்தர்

விடை :அ ) சோறு

                                                            பகுதி - II ( பிரிவு - 1 )                                                                     2 X 2 = 4

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 12 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

8 ) பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

* அரும்பு 

* போது

* மலர் 

* வீ

* செம்மல்


9 ) விடைக்கு ஏற்ற வினா அமைக்க.


அ) பாட்டுக்கு ஒரு புலவன் என்று பாரதியாரைப் பாராட்டியவர் கவிமணி.

வினா 

பாட்டுக்கு ஒரு புலவன் என்று பாரதியாரைப் பாராட்டியவர் யார் ?

ஆ) இருத்தலும் இருத்த நிமித்தமும் உரிப்பொருள் எனப்படும்.

வினா 

உரிப்பொருள் என்றால் என்ன ?


10 ) வசனகவிதை குறிப்பு வரைக.

      உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.


11 ) ' பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறள் எழுதுக.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

      
                      பிரிவு - 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ) மலை - மாலை

மலை ஏற மாலை நேரம் சிறந்தது.

ஆ) வளி - வாளி

வளி மண்டலத்தில் வாளி போல் மேகம் திரண்டிருந்தது.

13 ) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

அ) கீரிபாம்பு - உம்மைத்தொகை 

வீட்டில் நானும் என் அண்ணனும் அடிக்கடி கீரியும் பாம்புமாக இருப்போம்.


ஆ) முத்துப்பல் - உவமைத்தொகை 

                  முத்துப்பல் தெரிய விருந்தினர்களை வரவேற்றார் உறவினர்.


14 ) கலைச் சொற்கள் தருக.

அ ) Folk Literature - நாட்டுப்புற இலக்கியம்

ஆ ) Storm - புயல் 


15. பகுபத உறுப்பிலக்கணம் தருக.

மலைந்து = மலை + த் + ( ந் ) + த் + உ

மலை - பகுதி 

த் - சந்தி

' ந் ' ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி.

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக. வினா எண். 18 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.                                                                                                                               3 x 3 = 9

16 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

 அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு  வாழையிலையில் விருந்து வைக்கின்றனர் . முருங்கைக்காய் சாம்பார், வேப்பம்பூ ரசம், மோர்க்குழம்பு தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.

அ) மினசோட்டா தமிழ்ச்சங்கம் எங்குள்ளது?

      மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமெரிக்காவில் உள்ளது.

ஆ) மினசோட்டா தமிழ்ச்சங்கம் எவ்விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது?

      வாழை இலை விருந்து விழாவை.

இ தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் யாவை? 

        முருங்கைக்காய் சாம்பார், வேப்பம்பூ ரசம், மோர்க்குழம்பு தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.

(அல்லது)

சோலைக்காற்றும், மின்சாரக்காற்றும் பேசிக்கொல்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக்காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் உரையாடல் :

சோலைக்காற்று : என்ன நண்பரே நலமா?

மின் விசிறிக் காற்று : நான் நலம்தான் நலம்தான்.

சோலைக்காற்று : என்ன இப்படிச் சலித்துக் கொள்கிறீர்?

மின் விசிறிக் காற்று : நான் என்ன உன்னைப் போலவா? எங்குப் பார்த்தாலும் சுற்றித் திரிவதற்கு
என்னைத்தான் மனிதர்கள் நான்கு சுவருக்குள்ளேயே அடைத்து விட்டார்களே?என்னுடைய இயக்கம் பிறருடைய கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறது ?

சோலைக்காற்று :  என்ன இப்படிக் கூறிவிட்டீர்!

மின் விசிறிக் காற்று  : உனக்கென்ன உன் செயல் உன்னிடம்தானே உள்ளது சோலையில் உள்ளமரம், செடி, கொடிகள் எல்லாமே உன்னால்தானே அசைகிறது ?
சோலைக்காற்று : என்ன என்னால் அசைகிறதா? அவை அசையும் போதுதான் நான் உருவாகிறேன். அவ்வாறு உருவாகும்போதுதான் பல மலர்களில் இருந்துநறுமணத்தை எடுத்து வந்து எல்லா இடங்களிலும் பரப்புகிறேன்.

மின் விசிறிக் காற்று :  நீதானே அவற்றை ஆட்டி வைக்கின்றாய்? உன் வேகத்தினால் பல முறைஅவற்றை அழித்தும் இருக்கிறாய்?

சோலைக்காற்று :  தெரியாமல்தானே பலரும் குழம்புகிறார்கள். கவிஞர் ஒருவர்

“கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா?
என்று பாடினார். ஆனால் அதற்கு விடை கிடைக்கவில்லை.

மின் விசிறிக் காற்று : எது எப்படியோ நீயும் நானும் மனிதர்களுக்கு நன்மையைத்தான் செய்கிறோம்.

சோலைக்காற்று : சரியாகச் சொன்னாய் என்ன உன் வேகம் குறைந்து விட்டதே.!

மின் விசிறிக் காற்று : மின்சாரத்தைத் துண்டித்து விட்டார்கள். சிலர் தேவைக்கதிகமாக மின்சாரத்தைப்
பயன்படுத்துகிறார்கள். மின்சாரத்தைச் சேமிக்கும் விதமாக இவ்வாறு நான்கு
மணி நேரம் மின்சாரத்தைத் துண்டித்து பலரைத் துன்படுத்துகிறார்கள்.

சோலைக்காற்று : சரி சரி நீயும் கொஞ்சம் ஓய்வெடு, மீண்டும் சந்திப்போம்.

*****************    ***********  ******

17 ) அடிபிறழாமல் எழுதுக.

அன்னைமொழியே எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்தினாரின் பாடல்.

அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே !

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !

இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே ! நற்கணக்கே !

மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே !

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !

(அல்லது)

விருந்தினராக ஒருவன் வந்து எதிரின் என்று தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

    போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே .

18 ) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக. 

இக்குறளில் பயின்று வரும் அணி : உவமையணி

அணி விளக்கம் : 

                   ஒரு செய்யுளில் உவமான - உவமேயங்களை ஒப்புமைப்படுத்திக் கூறும்போது இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.

உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்தல்

உவமேயம் : அரசன் தன் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மக்களிடம் வரி விதித்தல் .

உவம உருபு : போலும் - போல என்ற உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளது.

அணி பயின்ற விதம் : 

                  ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு மக்களிடம் வரிவிதிப்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும் என்று உவம உருபு ( போன்ற ) வெளிப்படையாக வந்துள்ளதால் உவமையணி பயின்று வந்துள்ளது.

(அல்லது)

கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீயெழும்பு!

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு!

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு

இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

விடை 

கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்

காலையிலே நீயெழும்பு - வேற்றுமைத் தொடர்.

மாமழை பெய்கையிலே - உரிச்சொல் தொடர்

மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்.

பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்.

                                                                          பகுதி - IV                                                                          3 x 4 = 12

பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

19 ) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக.

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கு :

(i) முத்தமிழ் : கடல் - முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது. தமிழ் - இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் விளங்குகிறது. .

(ii) முச்சங்கம் : கடல் - வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத்தருகிறது. தமிழ் - முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.

(ii) மெத்தவணிகலன் (மெத்த + அணிகலன்) : தமிழ், ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப்
பெற்றுள்ளது. கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.

(iv) சங்கத்தவர் காக்க : தமிழ், சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.
கடல், தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்.

***********************    ******************


20. உணவுவிடுதியொன்றில், வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுடன் உணவுபாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர் :

மு.தமிழரசன் , 
01 ,  பாரதிபுரம் ,
கருப்பாயூரணி ,
மதுரை - 625 020.

பெறுநர் :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்
உணவுப் பாதுகாப்பு ஆணையம் , 
சென்னை.

ஐயா , 

பொருள் : உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது தொடர்பாக .

        மதுரை மங்கை உணவு விடுதியில் உணவு உண்டேன்.உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது. உணவு உண்ட இரசீது இணைத்துள்ளேன்.உணவு விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

                          நன்றி.

                        தங்கள்  உண்மையுள்ள , 

                                    தமிழரசன்.

உறைமேல் முகவரி :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்
உணவுப் பாதுகாப்பு ஆணையம் , 
சென்னை.

21 ) இன்சொற்களைப் பேசுவதனால் விளையும் நன்மைகள் ஐந்தினை எழுதுக.

* பிறர் மனம் மகிழும்

* அறம் வளரும்

* புகழ் , பெருமை சேரும்

* நல்ல நண்பர்கள்    சேருவர்

* அன்பு நிறையும்

22. காட்சியினைக் கண்டு கவினுற எழுதுக.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

23. நயம் பாராட்டுக.

"கத்து கடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்" - காளமேகப்புலவர்.

முன்னுரை :

        சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகப்புலவர். மேகம் மழை பொழிவதைப்போலக் கவிதை மழை பொழிந்தவர். அவருடைய பாடல் நயங்களைக் காண்போம்.

திரண்ட கருத்து :

    ஒலிக்கின்ற கடலில் சூழப்பட்ட நாகைக் காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் பொழுதில் அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இட்டுச் சோறு பொங்கி முடிக்கும் போது ஊரடங்கி உறங்கும் இரவாகிவிடும். அந்தச் சோற்றை ஓர் அகப்பை எடுத்து உண்ண இலையில் இடும்போது காலை அதிகாலை விடிவெள்ளி உதிக்கும் என்று சித்திரம் ஊரில் நிலவும் வறுமையின் அவலத்தைக் கூறுகிறார்.

                  ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட நாகைக் காத்தானின் சத்திரத்தில் உலகில் வேறெங்குமே அரிசி இல்லாமல் அஸ்தமிக்கும் வேளையிலும் இங்கு அரிசி மூட்டை மூட்டையாய் வரும். அதைக் குத்திப் பக்குவமாய் அடுப்பிலேற்றி உலையில் இடுவதைக் கண்டதுமே மக்களின் பசி அடங்கி விடும். சோறாக்கிய பின்பு ஓர் அகப்பை அன்னத்தை எடுத்து இலையில் இட்டதுமே அதன் வெண்மை நிறம் கண்டு நாணி. விடிவெள்ளி எழுந்து வரும் என்று சத்திரம் ஊரின் பெருமை கூறுவதாகவும் இருபொருள்படுகிறது.


தொடை நயம்:

எதுகைத் தொடை :

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதலெழுத்து

அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து

ஒன்றுபோல வருவது எதுகையாகும்

எ.கா.

த்துகடல்

த்தமிக்கும்

குத்தி

லையிலிட

லையிலிட

மோனைத்தொடை

         செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

எ.கா.

த்து - டல்

த்தமிக்கும் 

ரிசி 

கப்பை 

ன்னம்

இயைபுத்தொடை :

         செய்யுளின் இறுதிச்சீரோ , அசையோ , எழுத்தோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.

எ.கா :

உலையிலி

இலையிலி

வரும்

எழும்

முரண்தொடை :

எதிர்ச்சொற்கள் பாடலில் இடம் பெறுவதால் முரண் தொடை வந்துள்ளது.

எ.கா.

அத்தமிக்கும் X வெள்ளி எழும்

அணி நயம்:

          சத்திரத்தின் வறுமையையும் செழிப்பையும் இருபொருள்பட பாடியுள்ளதால் இதில் ' 'இரட்டுற மொழிதல் ' அல்லது சிலேடை அணி பயின்றுள்ளது.

*********************     ********************

24. காற்று மாசினைத் தடுக்க நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை எழுதுக.

25. புயலிலே ஒரு தோணிகதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும்,ஒலிக்குறிப்புச் சொற்களும், புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.

முன்னுரை :

     ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம். கடற்பயணத்தில் கண்ட காட்சிகளும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளும்தான் இக்கதைப்பகுதி .

புயலின் தொடக்கம் :

                      வெயில் இமைநேரத்தில் மறைந்துவிட்டது. புழுங்கிற்று. பாண்டியன் எழுந்து போய் அண்ணாந்து
பார்த்தான். மேகம் திரண்டு இருண்டன. அலைகள் மொழுமொழுவென நெளிந்தன. காற்றில்லாமல் ஒரே இறுக்கம். வானையும் கடலையும் மாறிமாறிப் பார்த்தவாறு மாலுமிகள் பாய்மரத்தில் உள்ள கட்டுக்கயிறுகளை இறுக்கினர். எல்லோரும் மிரண்டு விழித்தனர். இடிமுழக்கம், மின்னல் ஒளி, அதேசமயம் விரைவும் பளுவும் கொண்ட மோதல் தொங்கானையும் உலுக்கிற்று.

தள்ளாடிய தொங்கான் :

                   வானம் உடைந்து வெள்ளம் கொட்டியது. சூறாவளி மாரியும் காற்றும் ஒன்று கலந்தது. வானுடன் கடல் கலந்து வளியுடன் இணைந்துவிட்டது. தொங்கான் தத்தளித்தது. எலும்புகள் முறிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலி. மின்னொளி, கப்பித்தான் பொந்து, தாவும் பேயுருவங்கள், சுறாமீன், ரம்பப்பல்,
காற்றோலக்கடல், சீற்றமழை, உடலயர்வுப் புலன் மயக்கம். திடுமென அமைதி நிலவியது. ஓடி வாருங்கள்
என்று கப்பித்தான் கத்துகிறான். பாண்டியன் எழுந்தான் தொங்கான் தள்ளாடுகிறது. மலைத்தொடர் போன்ற
அலைகள் மோதித் தாக்கின.

கிறுகிறுத்துக் கூத்தாடியது :

          வானம் பிளந்து தீ கக்கியது. மழை வெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறி கொண்டு
கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதித்து நொறுங்கியது. உடை உடலை இறுக்கி
ரம்பமாய் அறுக்கிறது. தொங்கான் தாவி விழுந்து சுழல்கிறது. மூட்டைகள், சிப்பங்கள் நீந்தியோடி மறைந்தன. தொங்கான் சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.

நின்றுபோன கடிகாரங்கள் :

                     சூரிய வெளிச்சம் வந்தது. தொங்கானில் நீர் நெளிகிறது. பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. மாலுமிகள் நீரை
இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். ஆப்பு அடித்தனர். மரம் வெட்டினர், செதுக்கினர். தொங்கானின் இருபுறமும் தேயிலைப் பெட்டிகளும் புகையிலைச் சிப்பங்களும் மிதந்தன. பாண்டியன் கடலைப் பார்த்து மலைத்து நின்றான். கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்ததென்று என்று கணக்கிட
முடியவில்லை. தொடங்கியபோதோ முடிந்தபோதோ வெகுநேரம் வரையிலோ யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்றுபோயிருந்தன.

தன் வசமில்லாத் தொங்கான் :

                    தொங்கான் தன்வசமின்றித் தடுமாறிச் சென்றது. கடற்கூத்தின் போது மாலுமிகளால் தூக்கி  எறியப்பட்ட பெட்டிகளும் சிப்பங்களும் மூட்டைகளும் மிதந்தன. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாகத் தெளிச்சி பெறவில்லை. கப்பித்தான் இரவில் மேல் தட்டுக்கு வந்து வானையும் கடலையும்
ஒரு சுற்றுப் பார்த்தார். பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். கப்பித்தான் இனிமேல் பயமில்லை. இரண்டு
நாளில் கரையைப் பார்க்கலாம்.

மிதந்து சென்ற தொங்கான் :

                மறுநாள் காலையில் சூரியன் உதித்தான். கடல் அலைகள் தொங்கானை மோதின. பறவை மீன்கள்
இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின. கடலின்  இழுவைக் கிணங்கி தொங்கான் மிதந்தது.
இருநாள்கள் கழிந்தன. பிறைமதி வெளிச்சம் சிந்திற்று. விண்மீன்கள் கண்சிமிட்டி நின்றன. உப்பங்காற்று
உடலை வருடியது. மீன்கள் கூட்டம் கூட்டமாய் நீந்தின. அலைகள் நெளிந்தோடின.

கரையை நெருங்கிய தொங்கான் :

             கடற்கூத்துக்குப் பின் ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாகக் கடலோடு கடலாய் மரப்பச்சை
தெரிவது போல் இருந்தது. அரை மணி நேரத்திற்குப் பிறகு மீன்பிடி படகு விளக்குகள் தென்பட்டன. அடுத்த நாள் பினாங்குத் துறைமுகத்தை அடைந்தது தொங்கான். தொலைதூர நாவாய்கள் கரையை மொய்த்திருந்தன. எங்கிருந்து வருகிறார்கள் என்ற கேள்வி பல திசைகளிலிருந்தும் எழுந்தன.

முடிவுரை :

புயலிலே ஒரு தோணி கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணிப்படும்பாட்டை மிகவும் தத்ரூபமாகக் காட்டுகிறது. மேலும்
நாமே அத்தொங்கானில் பயணம் செய்ததைப் போன்ற ஓர் உணர்வை காட்டுகிறது.

***********   ***************   *************

26 ) சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. 

சான்றோர் வளர்த்த தமிழ்

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்

வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி”

என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழ் மூவாயிரம்   ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம் மிக்க மொழி. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. அதுதனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருந்த மொழி.

        “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்” எனப் போற்றிப் புகழப்படுகின்ற தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளது. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகி இருந்தமையால், தமிழ்மொழி திருந்திய மொழியாகத் திருத்தம் செய்யப்பட்ட மொழியாக ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்று விளங்குகிறது. பண்டைத் தமிழை அறிந்து கொள்ள தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் உதவுகின்றன. இடைக்காலத் தமிழை அறிந்துகொள்ள பக்தி இலக்கியங்கள் உதவுகின்றன.   இவ்விலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் நெறிகளை                    வெளிப்படுத்துகின்றன. ஆதலால் இவை மக்கள் இலக்கியம் என்றே வழங்கப்படுகிறது.

'ஏடு காத்த ஏந்தல்' என்ற சிறப்பிற்குரிய தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் இல்லையெனில் தமிழ்இலக்கியங்களை எவரும் அறிந்திருக்க இயலாது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, காப்பியங்கள் என அனைத்தையும் அச்சிட்டுத் தம் பதிப்புப் பணியினால் தமிழுக்கு அழகூட்டியுள்ளார்.

       சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரைப் பரிதிமாற்கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர்  தமிழ்மொழியை உயர்தனிச்செம்மொழி என்று முதன்முதலாக நிலைநாட்டிய பெருமைக்குரியவர்.

மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் உருவாக்கி தமிழை வளர்த்தவர்.

தேவநேயப் பாவாணர், தமிழே உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த
வாதங்களை முன் வைத்த தமிழறிஞர்.இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பல.  மு. வரதராசனார்,
மீனாட்சி சுந்தரனார், ச. வையாபுரிப் பிள்ளை ரா.பி.சேதுப்பிள்ளை எனப் பலராலும் கன்னித் தமிழாய்
விளங்கும் தமிழன்னைவளர்க்கப்பட்டாள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஜி.யூ.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோர்தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பறியது.
தமிழ்மொழியில் உள்ள நீதிநூல்கள், பதினெண்மேல்கணக்காகிய சங்க இலக்கியங்கள், பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், பள்ளு, குறவஞ்சி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், பரணி, உலா,
அந்தாதி எனத் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாய் விளங்கி
அழகூட்டுவதற்குப் பலரும் பணியாற்றியுள்ளனர்.

         தமிழன்னைக்கு அணிகலன்களாய் விளங்கும் நூல்களைப் படிப்போம். இன்புறுவோம். புதிய அணிகலன்களை உருவாக்கி அழகுக்கு அழகு சேர்ப்போம்.




 

No comments:

Post a Comment