ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு முதன்மைத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்.
இந்நிலையில், இந்தாண்டு 861 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி மாதம்யுபிஎஸ்சி வெளியிட்டது.
தொடர்ந்து, இந்தியன் ரயில்வேயின் ஒருபகுதியான ஐஆர்எம்எஸ் குரூப்-ஏ பதவிகளில் உள்ள150 பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த காலிபணியிடங்கள் எண்ணிக்கை 1,011-ஆக உயர்த்தப்பட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 4-ம் தேதி நாடு முழுவதும் 77நகரங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவு இன்னும் வெளியாகாத சூழலில், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு குறித்த அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 24, 25-ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment