சிறார் திரைப்படம் திரையிடும் போது பள்ளியளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தச் செயல்பாடுகள் (2)
1. திரைப்படம் திரையிடுவதற்கு முன் 'சிறார் திரைப்படத் திருவிழா' திட்டத்தின்
நோக்கத்தை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.
2. இதைத்
திரைப்படத்தின்
தொடர்ந்து,
விமர்சனத்தையும்
கதைச்சுருக்கத்தையும் சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள
வேண்டும் அல்லது திரைப்படத்தின் முடிவைத் திரையிடாமல் மாணவர்களிடம்
மீதமுள்ள கதையை அவர்களின் கற்பனைத்திறனுக்கு ஏற்ப அமைக்கச்
சொல்லவேண்டும்.
3. திரைப்படத்தை அமைதியாகப் பார்க்க வேண்டும் என்பதை ஆசிரியர்
குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். ஏனெனில், இது அவர்களின் கவனத்தை
மேம்படுத்துவதோடு திரையிடலுக்குப் பின்தொடரும் உரையாடலுக்கும் உதவும்.
4. திரைப்படம் முடிந்த பிறகு இப்படத்தைச் சார்ந்து வினாடி-வினா /
கலந்துரையாடல் / விவாதம் ான்றவை நடத்தப்படும் என்பதை
மாணவர்களுக்குத் தெரிவிப்பதன் வாயிலாக
இந்நிகழ்வை மேலும்
சுவாரசியமாக்கலாம்.
5. ஆசிரியர் உரையாடலுக்கான அனைத்து கேள்விகளையும் தயாராக
வைத்திருத்தல் நலம்.
No comments:
Post a Comment