ரூ. 2 லட்சம் ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க நாணயம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 August 2022

ரூ. 2 லட்சம் ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க நாணயம்

ரூ. 2 லட்சம் ஒப்படைத்த பெண்ணுக்கு தங்க நாணயம் 

திருச்சி, தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி, 57. நேற்று, இவர் வேலைக்கு சென்ற போது, ஹோட்டலுக்கு அருகில் காகிதப்பையில் அதிகமான பணம் இருந்துள்ளது. அதை எடுத்து பார்த்த ராஜேஸ்வரி, ஹோட்டல் உரிமையாளர் பிரபாகர் உதவியுடன் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். 
தினமும் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நிலையிலும், காகித பையில் இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்படாமல், அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த ராஜேஸ்வரியை பாராட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், 1 கிராம் தங்க நாணயம் வழங்கி பாராட்டினார்.

No comments:

Post a Comment