தினமும் அதிகாலையில் 4 கருவேப்பிலை- வாரிக்கொடுக்கும் நன்மைகள்! - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 3 August 2022

தினமும் அதிகாலையில் 4 கருவேப்பிலை- வாரிக்கொடுக்கும் நன்மைகள்!

கருவேப்பிலை என்பதைப் பொறுத்தவரை, சமையலுக்குப் போட்டுவிட்டுத் தூக்கி எறியும் ஒன்று என்பதுதான் நமக்குத் தெரிந்தது. உண்மையில், இது ஒரு மூலிகை. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டால் பல நன்மைகளை நாம் பெற முடியும். 


 ஊட்டச்சத்து பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, காப்பர், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது, உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. எனவே தினமும் அதிகாலையில் 3 முதல் 4 பச்சை கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டால் பல நன்மைகளைப் பெற முடியும். கண் கோளாறு கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். 
மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 
 சர்க்கரை ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய்யை குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். மலச்சிக்கல் செரிமானத்திற்குக் கருவேப்பில்லை பெரிதும் உதவியாக இருக்கும். 
 இதன் காரணமாக, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும். நோய்த் தொற்று இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது. எனவே தினமும் காலையில் 3 முதல் 4 கருவேப்பிலையை மென்றுத் தின்பதை வழக்கமாக்கிக்கொண்டு, நோய்களில் இருந்து விடுதலை பெறுவோம்.

No comments:

Post a Comment