போன் ஆஃப்லைன் இருந்தாலும் இனி வாட்ஸ்அப்பை இயக்க முடியுமாம் - புதிய அப்டேட் அறிமுகம்.!
உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான யூசர்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது.
இந்த வாட்ஸ்அப் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதற்கேற்றால் போல் தான் வாட்ஸ்அப் நிறுவனமும் யூசர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட் செய்து வருகிறது. வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் இருந்த நிலையில் 512 ஆக உயர்த்தியது, மெசேஜ்களுக்கு விரைவாக ஈமோஜிகள் மூலம் ரிப்ளே செய்வது, குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் குழுவில் இருந்து வெளியேறுவது போன்ற அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கான மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால் QR குறியீட்டைக் கொண்டு பயனர்களின் போனை ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம். ஆனால் தற்போது வின்டோஸ் நெட்டிவ் செயலியின் மூலம் நம்பகத்தன்மை மற்றும் வேகம் இரண்டும் அதிகரிப்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
எனவே யூசர்கள் தங்கள் ஃபோன்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் WhatsApp அறிவிப்புகள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்த முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்டோஸ் நேட்டிவ் ஆப் வாட்ஸ்அப் தற்போது வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது என்றும் பீட்டா பதிப்பு மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பயன்பாடு விண்டோவிண்டோஸுக்குக் கிடைத்தாலும், யூசர்கள் மைக்ரோசாஃப்ட் ஆப் ஸ்டோரிலிருந்து விண்டோஸ் நேட்டிவ் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
529ed92dccd899594bb83f4475a3f7f1a2b56c244989775ebc9eb4c2b1395d30
புதிய அப்டேட்டுடன் செயலியை எப்படி இணைக்க முடியும்.?
முதலில் windows மற்றும் Mac லேப்டாக்களில் உள்ள வாட்ஸ்அப் நேட்டிவ் ஆப்ஸில் லாகின் செய்ய வேண்டும். பின்னர் உங்களது மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறந்து ஐ பட்டனைத் தட்டி, இணைக்கப்பட்ட சாதன விருப்பத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். பின்னர் விண்டோஸின் வாட்ஸ்அப் நேட்டிவ் பயன்பாட்டின் QR குறியிட்டை ஸ்கேன் செய்து தொலைப்பேசியிலிருந்து லேப்டாப்புடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்கேன் செய்தவுடன் இனி தொடர்ச்சியாக உங்களது windows மற்றும் Mac மடிக்கணிகளில் வாட்ஸ்அப் வரும் அறிவிப்புகள் மற்றும் நண்பர்கள் அனுப்பும் செய்திகளை நீங்கள் பெற முடியும்.
இதோடு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் தொலைபேசி ஆஃப்லைனில் இருந்தாலும் உங்களது லேப்டாப்பில் வாட்ஸ்அப்பை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த அப்டேட் நிச்சயம் யூசர்களுக்கு மிகுந்த பலனளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment