சாதித்த மாணவர்களுக்கு இலவச விமான பயணம்
மண்ணிவாக்கம்
வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை, இலவசமாக ஹைதராபாத்திற்கு விமானத்தில் அழைத்துச் சென்றது.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தாவூத் மார்வா, அமுதன் மற்றும் மோகனப்பிரியா ஆகியோர் ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
இவர்களை, இலவசமாக விமானம் வாயிலாக ஹைதராபாத் நகருக்கு அழைத்துச் சென்று, திரும்ப வர பள்ளி நிர்வாகம்ஏற்பாடு செய்தது.அவர்கள் கோல்கொண்டா கோட்டை, பிர்லா பாலாஜி கோவில், லும்பிணி பூங்கா, ஹுசைன் சாகர் ஏரி, உஸ்மானியா பல்கலைக் கழகம், மெக்கா மசூதி, சார்மினார் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தனர்.சாலார்ஜங் மியூசியத்தையும் பார்த்தனர்.
பள்ளி துவங்கிய வருடத்திலிருந்தே, வெளி உலக அனுபவம் பெறும் பொருட்டு, இலவச விமானப் பயணத்திற்கு நடேசன் பள்ளி ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment