தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சாரண, சாரணியர் இயக்கம் ஏற்ப்படுத்தபட்டு மாணவர்களுக்கு சிறப்பிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாரண, சாரணியர் இயக்கம்:
உலக அளவில் இளைஞர்கள் இயக்கங்களுள் ஒன்று தான் சாரணர் இயக்கம். மாணவ பருவத்திலேயே இராணுவ கட்டுக்கோப்பு, நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்கும் நோக்கில் 1908ம் ஆண்டு சாரணர் இயக்கம் இங்கிலாந்து வீரர் பேடன் பவல் என்பவரால் கொண்டு வரப்பட்டது. இவர் சாரணர் இயக்கத்தின் தந்தையாக கருதப்படுகிறார். இந்த இயக்கத்தில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நன்னடத்தை பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, பொதுநல சேவைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஒரு செயலை திறம்பட செய்வதிலும், தலைமை வகிப்பதிலும் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்து பிறகு சாரணர் இயக்கம் செயல்பட தொடங்கியது. மாணவர்களிடம் இறை பக்தியையும், தர்ம சிந்தனையையும் நாட்டிற்கும் சேவை செய்யும் நோக்கத்தையும் கொண்டு வருவதை முதன்மையாகக் கொண்டு சாரணர் இயக்கம் இயங்கி வருகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சாரணர் இயக்கம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சாரணர் இயக்கம் மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அது, குருளையர், சாரணர், திரிசாரணர் ஆகியவை ஆகும். இது வயது அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சாரண, சாரணிய இயக்க மாநில ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
No comments:
Post a Comment