சிறார் திரைப்படம் திரையிடல் முடிந்ததும் பள்ளியளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 25 August 2022

சிறார் திரைப்படம் திரையிடல் முடிந்ததும் பள்ளியளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள்

சிறார் திரைப்படம் திரையிடல் முடிந்ததும் பள்ளியளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் 

1. திரைப்படம் முடிந்த பிறகு, அனைத்து உபகரணங்களின் இணைப்புகள் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்த பிறகு சம்பந்தப்பட்ட நபரிடம் அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்காக ஒப்படைக்க வேண்டும். 

2. இணைப்பில் வழங்கப்பட்டுள்ள படிவத்தின் (Template) அடிப்படையில், திரைப்படத்தைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள குழந்தைகளை எழுத அல்லது வரையச் செய்தல் வேண்டும். 

3. கதைக்களம், கதாபாத்திரங்கள், உரையாடல்கள், இடம், வண்ணங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் தொடர்பான கேள்விகளில் கவனம் செலுத்தும் 'ஸ்பாட்லைட்' (Spotlight) என்ற நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வு 15 - 20 நிமிடங்கள் வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாதமும் பரிசுகளோ சான்றிதழ்களோ வழங்கலாம். தனி நபருக்கு ஒன்றும் அணிக்கு ஒன்றும் வழங்கலாம். அதிக கேள்விகளுக்கு யார் அல்லது எந்த அணி பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து, அந்த நபர் / குழுவிற்குப் பரிசு வழங்கலாம். 

4. குழந்தைகள் தங்களுக்கு மிகவும் பிடித்த காட்சி அல்லது உரையாடலை இயக்கியும் / நடித்தும் காட்டச் செய்யலாம். 

5. மாணவர்களப் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும்படி ஏதேனும் ஒரு கதையை எழுதவோ விவரிக்கவோ செய்யலாம். 6. மாணவர்களின் சிறந்த செயல்பாடுகளை (ஓவியம்,கட்டுரை, பிற.,) கம்பிப் பந்தலிலோ, பள்ளி சுவரொட்டியிலோ (Notice Board) காட்சிப் படுத்தலாம் DOWNLOAD PROCEEDINGS

No comments:

Post a Comment