பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி:
கல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளிகளில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்பு
ணர்வு உறுதிமொழியேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறி
வுறுத்தியுள்ளது.
போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டா
லின் வியாழக்கிழமை (ஆக.11) தொடக்கிவைக்கவுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார்,அனைத்து மாவட்
ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்
தில் அனைத்துவித உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் 12-ஆம்
தேதி தொடங்கி ஆக.19 வரை விழிப்புணர்வு வாரம் பின்பற்ற திட்டமி
டப்பட்டுள்ளது.
அதற்கேற்ப பள்ளிகளில் மாணவர்கள் வியாழக்கிழமை
(ஆக.11) போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை 10.30
மணிக்குள் எடுக்கவைக்க வேண்டும். அதன்பின் கல்வி தொலைக்காட்சி
யில் ஒளிபரப்பப்படும் நேரலை விழிப்புணர்வு குறும்படத்தையும் மாண
வர்கள் பார்வையிட வைக்க வேண்டும். இதுசார்ந்து பள்ளி தலைமையா
சிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும். மேலும், பள்ளிக
ளில் உறுதிமொழி எடுத்த விவரங்களை இயக்குநரகத்துக்கு அறிக்கையாக
முதன்மைக்கல்வி அதிகாரிகள் அனுப்பிவைக்க வேண்டும்.
No comments:
Post a Comment