என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது - EDUNTZ

Latest

Search Here!

Monday, 1 August 2022

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது



என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று முடிந்து இருக்கிறது. 
விண்ணப்பப் பதிவு செய்திருந்தவர்களில், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 442 மாணவ-மாணவிகள் முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல் நாளான இன்று 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 6-ந் தேதி (சனிக்கிழமை) வரை தினமும் 375 பேரும், கடைசி நாளான 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 317 பேரும் அழைக்கப்பட்டு இருக்கின்றனர். சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு தேர்வு முடிவு தாமதமாக வெளியானதால், அவர்களும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அவர்களில் விளையாட்டுப் பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலுடன், 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment