பயணத்தின்போது உடல் அசவுகரியங்களைத் தடுப்பது எப்படி? - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 August 2022

பயணத்தின்போது உடல் அசவுகரியங்களைத் தடுப்பது எப்படி?

பயணங்கள் பல சாதனைகளுக்கு வழிவகுக்கின்றன. கல்வி, சுற்றுலா, தொழில், வேலை, தனிப்பட்ட காரணங்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக பயணம் மேற்கொள்கிறோம். 

அத்தகைய பயணம் சிலருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விடுவதும் உண்டு. அதற்கு முக்கியமான காரணம், பயணத்தின்போது ஏற்படும் உடல் அசவுகரியங்கள்தான். அவற்றை தடுக்கும் வழிகள் குறித்து இங்கே அறிவோம். தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி: இதற்கு முதல் காரணம் சுவாசக் காற்றுப் பற்றாக்குறையே. எனவே ஜன்னல் ஓரங்களில் உட்காருங்கள். வாகனங்கள் நகரும்போது, நாம் காணும் காட்சிகள் அனைத்தும் வேகமாக நம் பார்வையை விட்டு விலகு வதால், உடல் சமநிலையை இழக்கும். 

இதைத் தவிர்ப்பதற்கு வாகனம் நகரத் தொடங்கியதும் சற்று நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பயணத்திற்கு முன்பு எளிதாகச் செரிக்கக் கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். சில சமயம் செரிமானக் கோளாறுக்கூட வாந்திவரும் உணர்வு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதே சமயம் எதுவும் சாப்பிடாமலும் செல்லாதீர்கள். இதுவும் குமட்டலை ஏற்படுத்தும். சரும ஒவ்வாமை: ஈரமான அல்லது உஷ்ணமான காற்றுபட்டவுடன் சருமம் தடித்தல், அரிப்பு, தோல் வெடிப்பு போன்ற ஒவ்வாமைகள் ஏற்படலாம். எண்ணெய் போன்றவற்றை தடவி தோலினை பாதுகாக்கலாம். 
உடலில் நேரடியாகக் காற்றோ, சூரிய ஒளியோ படாதவாறு முழுநீள உடைகளை அணியுங்கள். சுவாசக் கோளாறு: காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறு ஏற்படும் என்பதால் முக கவசத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் சொந்த வாகனப் பயணம் எனில், முன் கதவுகளைத் திறந்துச் சற்று நேரம் வாகனத்தை இயக்குங்கள். மூடி வைத்ததால் அடைப்பட்டுள்ள வாகனப் பாகங்களின் மணம், ஏ.சி.யில் உள்ள தூசுகள், வாகனத்தின் உள்ளே படிந்துள்ள மாசுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். இவையும் உபாதை களைத் தவிர்க்க உதவும். கால் வீக்கம்: நீண்ட நேரம் தொங்கவிடப்பட்ட நிலையில் இருப்பதால், முறையான ரத்த ஓட்டம் நிகழாமல் கால்களில் வீக்கம் ஏற்படலாம். 
எனவே கால்களை ஒரே நிலையில் வைக்காமல் சற்று நேரம் மடக்கி, நீட்டி என்று நிலைகளை மாற்றி அமருங்கள். சிறுநீரை வெளியேற்றாமல் இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும். கழுத்து - இடுப்பு வலி: முறையற்ற இருக்கை அமைப்பே இப்பிரச்சினைக்கு முதல் காரணம். எனவே துண்டு, துப்பட்டா போன்றவற்றை உருண்டை வடிவில் உருட்டி, கழுத்தைச் சுற்றித் தலையணைப் போன்றும், இடுப்பின் பின் பகுதியிலும் வைக்கவும். இதன் மூலம் இருக்கையில் சாய்ந்து உட்காருவதால் ஏற்படும் பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றைத் தவிர்க்கலாம், எலும்புத் தேய்மானத்தையும் குறைக்கலாம். அதிக அதிர்வை ஏற்படுத்தும் பின் இருக்கைகளைத் தவிர்த்திடுங்கள். தவிர்க்க வேண்டியவை: அதிக நீர் அருந்துவது, பயண நேரத்தில் தின்பண்டங்கள் சாப்பிடுவது, தேநீர், காபிப் பருகுவது போன்றவற்றை கூடுமானவரைத் தவிர்த்திடுங்கள்.

No comments:

Post a Comment