என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் எப்போது அமல்? அதிகாரிகள் புதிய தகவல் | When will the new syllabus for engineering courses come into effect? Officers new information - EDUNTZ

Latest

Search here!

Sunday, 14 August 2022

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் எப்போது அமல்? அதிகாரிகள் புதிய தகவல் | When will the new syllabus for engineering courses come into effect? Officers new information

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் எப்போது அமல்? அதிகாரிகள் புதிய தகவல்


வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப என்ஜினீயரிங் கல்லூஅதிகரிக்க, பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, அதனை மாற்றி அமைக்க 90 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்தது. இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளுக்கு தேவையான மனிதவளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டத்துக்கு சில பரிந்துரைகளை அளித்தது. நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய பாடத்திட்டம் காலத்திற்கேற்றபடி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டம் அங்கீகரித்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 17-ந்தேதி (புதன்கிழமை) முதல்-அமைச்சரின் முன்னிலையில் அதை அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டனர். தற்போது அந்த தேதியும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் எப்போது புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன. 

எனவே புதிய பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரிகளில் அமல்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்க திட்டமிட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய பாடத்திட்டம் 2021-ம் ஆண்டில் இருந்து என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பொருந்தும்.

No comments:

Post a Comment