பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப் பாடத்திட்டம் - எழுத்து , சொல் & காற்றே வா - வினா & விடை / 10TH TAMIL - ONLINE CERTIFICATE EXAM - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 14 September 2022

பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப் பாடத்திட்டம் - எழுத்து , சொல் & காற்றே வா - வினா & விடை / 10TH TAMIL - ONLINE CERTIFICATE EXAM

பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப் பாடத்திட்டம் - எழுத்து , சொல் & காற்றே வா - வினா & விடை / 10TH TAMIL - ONLINE CERTIFICATE EXAM

இயங்கலைத்தேர்வு

வினாக்களும் விடைகளும்

1) மொழியைத் தெளிவாகப் பேசவும் , எழுதவும் உதவுவது

அ) இலக்கியம்

ஆ) இலக்கணம்

இ) இதிகாசம்

ஈ) புராணம்

2) சார்பெழுத்துகள் ------ வகைப்படும்.

அ) 4

ஆ) 6

இ) 8

ஈ) 10

3) அளபெடுத்தல் என்பதன் பொருள் -----

அ) மெதுவாய் ஒலித்தல்

ஆ) நீண்டு ஒலித்தல்

இ) குறுகி ஒலித்தல்

ஈ) சமமாக ஒலித்தல்


4 ) அளபெடை --------  வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஏழு

5) உயிரளபெடை -------  வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து


6) செய்யுளிசை அளபெடையின்
மற்றொரு பெயர் ------

அ) இன்னிசை அளபெடை

ஆ) இசைநிறை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை

ஈ) ஒற்றளபெடை

7) கெடுப்பதூஉம் - இச்சொல்லில் உள்ள அளபெடை

அ) செய்யுளிசை அளபெடை

ஆ) சொல்லிசை அளபெடை

இ ) இன்னிசை அளபெடை

ஈ) ஒற்றளபெடை

8) ஓர் எழுத்து தனித்தோ , பல
எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தருவது

அ) சொல்

ஆ) தொடர்

இ) அமைப்பு

ஈ) பத்தி

9) தனிமொழி. தொடர்மொழி,
--- மொழி என மொழி மூன்று வகைப்படும்.

அ) செம்மொழி

ஆ) நம்மொழி

இ) கனிமொழி

ஈ) பொதுமொழி

10 ) ஒரு சொல் தனித்து நின்று
பொருள் தருவது - மொழி

அ ) தனிமொழி

ஆ) தொடர்மொழி

இ) புது மொழி

ஈ) பொதுமொழி

11) மலர் வீட்டுக்குச் சென்றாள் -
இது ----- மொழிக்குச் சான்றாகும்.

அ) தனிமொழி

ஆ) தொடர்மொழி

இ) பொதுமொழி

ஈ) செய்திமொழி


12) விகுதி பெறாமல் முதனிலை
திரிந்து வரும் தொழிற்பெயர் ------- ஆகும்.

அ ) முதனிலைத் தொழிற்பெயர்

ஆ) முதனிலைத் திரிந்ததொழிற்பெயர்

இ) பொருட்பெயர

ஈ) வினையாலணையும் பெயர்

13) ' பாட்டுக்கொரு புலவன்'
எனப் பாராட்டப்பட்டவர்

அ) திருவள்ளுவர்

ஆ) ஔவையார்

இ) கம்பர்

ஈ) பாரதியார்


14) உரைநடையும் கவிதையும்
இணைந்து யாப்புக் கட்டுக்கு
அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் ----

அ ) மரபுக்கவிதை

ஆ) ஹைக்கூகவிதை

இ) வசனகவிதை

ஈ) செய்யுள்

15 ) ' நீடுதுயில் நீக்கப் பாடிவந்த
நிலா' 'சிந்துக்குத் தந்தை'
என்றெல்லாம் பாரதியைப்பாராட்டியவர் -

அ) பாரதிதாசன்

ஆ) கவிமணி

இ)  கண்ணதாசன்

ஈ ) சுரதா

16) "உனக்குப் பாட்டுகள்
பாடுகிறோம் உனக்குப்
புகழ்ச்சிகள் கூறுகிறோம் " -
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
நயங்கள்

அ) உருவகம் , எதுகை

ஆ) மோனை , எதுகை

இ) முரண் , இயைபு

ஈ ) உவமை , எதுகை

17) நீரின்றி அமையாது ------

அ) நாடு

ஆ) ஊர்

இ) மக்கள்

ஈ) உலகு

18) மயலுறுத்து - பொருள் தருக

அ) மயக்கமடைதல்

ஆ) மயில் ஆடுதல்

) மயங்கச்செய்

ஈ) விழித்தல்


19 ) ப்ராணரஸம் என்பதன்
பொருள்

அ ) நீர் ஆவியாதல்

ஆ) உயிர்வளி

இ) ஆகாயம்

ஈ) மேகக்கூட்டம்

20) உனக்குப் பாட்டுகள்
பாடுகிறோம் - இவ்வடியில்
பாரதி உனக்கு என்று
குறிப்பிடுவது -----

அ) நீர்

ஆ) நெருப்பு

இ) நிலம்

ஈ) காற்று

No comments:

Post a Comment