தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் | நாள் : 19.09.2022 - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 20 September 2022

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் | நாள் : 19.09.2022

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6. ந.க.எண்.28051 / கே2 / 2022, நாள் : 19.09.2022. 


பொருள் : 

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-23 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கு ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல் - பருவ தேர்வு விடுமுறைக்குப் பின் பயிற்சி நடைபெறுதல் - பள்ளி திறத்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக 

பார்வை : சென்னை-6, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடித ந.க.எண்.2411/ஈ2/2021, நாள் : 16.09.2022 

பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில், எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கு ஒன்றிய அளவில் 1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 06.10.2022 முதல் 08.10.2022 வரை 3 நாட்கள் பயிற்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் (தலைமை ஆசிரியர் உட்பட) ஒன்றிய அளவில் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

முதல் பருவ தேர்வு விடுமுறைக்குப் பின் 06.10.2022 முதல் 08.10.2022 வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகள் வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்வதால் இந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் அந்த நாட்களில் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை என்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 06.10.2022 முதல் வழக்கம் போல் பள்ளி செயல்படும் என்ற விவரத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வழியாக) -மூர்ானது தொடக்கக் கல்வி இயக்கியக 19.05.3-

No comments:

Post a Comment