2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 18 September 2022

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள்

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்த உத்தரவு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண். 2411 / ஈ2/ 2020. 

நாள். 16.09.2022 

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல்-சார்பு. 
பொருள் : பார்வை : தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண். 2411 / ஈ2/ 2021. நாள். 12.09.2022 பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள இணை செயல்முறைகளின்படி இந்நிறுவனத்தால் 4 மற்றும் 5ஆம் வகுப்பு தமிழ். ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. 
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டு வினாக்கள் குறுந்தகடு வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வினாக்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இத்தேர்வினை நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இத்தேர்வு முடிந்த பின்பு 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கு பாடவாரியாக விடைக்குறிப்புகளை பள்ளிகளுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

இணைப்பு: 

1. தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை 

2.4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் அடங்கிய 3 குறுந்தகடுகள் 

பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

நகல்: இயக்குநர் Ru/16/9/22 

1. அரசு முதன்மைச் செயலர், தலைமைச்செயலகம், சென்னை-09 அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது. 

2. ஆணையர், பள்ளிக்கல்வி அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது. 3. மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை-06. அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது. 

4. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம். சென்னை-06. அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. ஆணையரகம். சென்னை-06.

No comments:

Post a Comment