வினாடி வினா & இயங்கலைத்தேர்வு
வினாக்களும் விடைகளும்
1) ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது ----- தொடர் எனப்படும்.
அ) தொகைநிலைத் தொடர்
ஆ) தொகாநிலைத்தொடர்
இ) கலவை வாக்கியத்தொடர்
ஈ) தனிமொழித்தொடர்
விடை : ஆ ) தொகாநிலைத்தொடர்
2) தொகாநிலைத் தொடர்கள் ----- வகைப்படும்.
அ) மூன்று
ஆ) ஆறு
இ) ஒன்பது
ஈ) பத்து
விடை : இ ) ஒன்பது
3) எழுவாயுடன் பெயர் , வினை , வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது ----- தொடர்.
அ) எழுவாய்த்தொடர்
ஆ) வேற்றுமைத்தொடர்
இ) வினைமுற்றுத்தொடர்
ஈ) அடுக்குத்தொடர்
விடை : ஈ ) விளித்தொடர்
4) நண்பா எழுது! - இது எவ்வகைத் தொடர்?
அ) எழுவாய்த்தொடர்
ஆ) இடைச்சொல்தொடர்
இ) உரிச்சொல் தொடர்
ஈ) விளித்தொடர்
விடை : ஈ ) விளித்தொடர்
5) வினைமுற்றுடன் ஒரு பெயர்
தொடர்வது ----- தொடர்.
அ) வினையெச்சத்தொடர்
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) வேற்றுமைத்தொடர்
ஈ) எழுவாய்த்தொடர்
விடை : ஆ ) வினைமுற்றுத்.தொடர்
6) ' கேட்ட பாடல்' என்பது ------
தொடருக்குச் சான்றாகும்.
அ ) பெயரெச்சத்
ஆ) வினையெச்சத்
இ) முற்றெச்சத்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : அ ) பெயரெச்சத்
7) முற்றுப்பெறாத வினை ,
வினைச்சொல்லைத் தொடர்வது ------
தொடர்.
அ) வினைமுற்றுத்தொடர்
ஆ) வினையெச்சத்தொடர்
இ) பெயரெச்சத்தொடர்
ஈ) இடைச்சொல் தொடர்
விடை : ஆ ) வினையெச்சத்தொடர்
8) அன்பால் கட்டினார் - இது -------
வேற்றுமைத் தொகாநிலைத்
தொடருக்குச் சான்றாகும்.
அ ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஐந்தாம்
விடை : ஆ ) மூன்றாம்
9) அறிஞருக்கு நூல் , அறிஞரது
நூல் ஆகிய சொற்றொடர்களில்
பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ------
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
விடை : அ ) வேற்றுமை உருபு
10 ) " பழகப் பழகப் பாலும் புளிக்கும் " - இப்பழமொழியில் உள்ள தொடர்வகை --
அ) பெயரெச்சத்தொடர்
ஆ) வினையெச்சத்தொடர்
இ) உரிச்சொல்தொடர்
ஈ) அடுக்குத்தொடர்
விடை : ஈ ) அடுக்குத்தொடர்
11) வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்களில் பொருந்தாதது எது ?
அ) வழியை நோக்கினான்
ஆ) விழியால் பேசினான்
இ) மொழிக்கு இசைந்தாள்
ஈ) பாடி மகிழ்ந்தாள்
விடை : ஈ ) பாடி மகிழ்ந்தாள்
12) மாநகர் ------ தொடர்.
அ ) இடைச்சொல் தொடர்
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) உரிச்சொல்தொடர்
ஈ) அடுக்குத்தொடர்
விடை : இ ) உரிச்சொல் தொடர்
13) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத தொடர் ------
அ) வருக வருக
ஆ) விம்மி விம்மி
இ) நன்று நன்று
ஈ) சலசல
விடை : ஈ ) சலசல
14) ஒழுக்கம் ------ தரும்
அ ) உயிர்
ஆ) விழுப்பம்
இ) இழுக்கம்
ஈ) பொருள்
விடை : ஆ ) விழுப்பம்
15 ) உலகத்தோடு ஒத்து வாழக்
கல்லாதவர் ----- என அழைக்கப்படுவார்.
அ) ஒழுக்கமில்லாதவர்
ஆ) உயர்வு இல்லாதவர்
இ) அறிவில்லாதவர்
ஈ) படிக்காதவர்
விடை : இ ) அறிவில்லாதவர்
16) காமம் ------ மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் .
அ) வெகுளி
ஆ) கல்வி
இ) அச்சம்
ஈ) பகை
விடை : அ ) வெகுளி
17) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு -
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
அ) உருவக அணி
ஆ) இல்பொருள் உவமையணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) உவமையணி
விடை : ஈ ) உவமை அணி
18 ) தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே ------
என்னும் செருக்கு.
அ ) வேளாண்மை
ஆ) முயலாமை
இ) இயலாமை
ஈ) பேசாமை
விடை : அ ) வேளாண்மை
19) முயற்சி திருவினை ஆக்கும் -
இத்தொடரில் 'திரு' என்பதன்
பொருள் -----
அ) கல்வி
ஆ) வீரம்
இ ) செல்வம்
ஈ) மக்கள்
20) எய்துவர் எய்தாப் பழி -
இக்குறளடிக்குப் பொருந்தும்
வாய்பாடு ------
அ) கூவிளம் தேமா மலர்
ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு
ஈ) புளிமா தேமா பிறப்பு
விடை : அ ) கூவிளம் தேமா மலர்
No comments:
Post a Comment