3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்.
சென்னை 600 006
ந.க.எண்.52556/அ4/இ3/2022, நாள்: 28.09.2022
பொருள்:
பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி
அனைத்து வகைப் பணியாளர்களுக்கான மாறுதல்
ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில்
பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல் -
நெறிமுறைகள் – சார்பு.
பார்வை:
3
1 அரசாணை நிலை எண். 10, பணியாளர் மற்றும் நிர்வாகச்
சீரமைப்புத்துறை, நாள்: 07.01.1994.
2, அரசாணை எண். 101, ப.க (வ.செ.) பள்ளிக் கல்வித்துறை,
நாள்: 18.05.2018.
3. அரசாணை நிலை எண். 125. பள்ளிக் கல்வித்
(ப.க4(1)துறை, நாள்: 16.12.2020.
4. அரசாணை எண். 151, ப.க (SE 1(1]] பள்ளிக் கல்வித்துறை,
நாள்: 09.09.2022.
5. சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக
இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
இணை
செயல்முறைகள், ந.க.எண். 26952/14/3/2021,
நாள்:11.03.2022.
6. சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக
இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
இணை
செயல்முறைகள், ந.க.எண்.
நாள்:12.08.2022.
24689/14/1/2019,
7. சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக
இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், ந.க.எண். 49138/அ3/இ1/2022, நாள்:
24.09.2022.
இணை
8. சென்னை -6. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையாக
இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், ந.க.எண். 52556/அ4/இ3/2022, நாள்:
28.09.2022.
பார்வை 6ல் காணும் செயல்முறை கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்
பள்ளிகளில் நிருவாகம் / அலுவலகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான
எண்ணிக்கையில் ஆசிரியரல்லா பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாணவர்களின்
எண்ணிக்கையின் அடிப்படையில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர்
பணியிடங்களில் பணியாளர் நிர்ணயம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் வகுத்து
பார்வை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வரசாணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர்களை
நிர்ணயம் செய்து கீழ்க்கண்ட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்
சரியான விவரங்களை எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட்டு 29.09.2022
பிற்பகல் 3.00 மணிக்குள் A4 மின்னஞ்சல் முகவரிக்கு a4sec.tndse@nic.in தவறாமல்
அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
1. பணிநிரவல் செய்யப்பட்ட பணியாளர்களின் பெயர் விவரப்பட்டியல்.
2. உபரி பணியிடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பள்ளிகளின் பெயர் விவரப்பட்டியல்.
3. மாவட்டத்திற்குள் உபரி பணியாளர்களை (Surplus post with person) பணிநிரவல் செய்ய
இயலாத நிலை இருப்பின் அப்பணியாளர்களின் பெயர் விவரப்பட்டியல்.
4. மாவட்டத்திற்குள் உபரி பணியிடங்கள் (Surplus post without person) பகிர்ந்தளிக்க இயலாத
நிலை இருப்பின் அப்பணியிடங்களின் பெயர் விவரப்பட்டியல்.
5. மாவட்டத்திற்குள் பணி நிரவல்/பணியிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னரும் கூடுதல்
தேவை இருப்பின் பணியிடம் வாரியாக பள்ளியின் விவரப்பட்டியல்.
மேலும், பார்வை 1ல் காணும் அரசாணையின்படி நிருவாகம் திறம்பட செயல்படும்
பொருட்டு பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பள்ளிகளில்
பணிபுரியும் பட்சத்தில் அவர்களை பதவியில் முதலில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கில்
கொண்டு பார்வை 7ல் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளைப்
பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி கலந்தாய்வை நடத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதலில் கலந்துக் கொண்டு மாறுதல்
பெற்றவர்களின் பணியிடங்கள் மட்டுமே காலிப்பணியிடமாகக் கருதி இவ்வாணையரகத்திற்கு
தெரிவிக்கப்பட வேண்டும்.
அதே போல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் பணியாளர்களின் விவரங்களை
அலுவலக முகவரியுடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை
முழுமையான வடிவில் பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் தவறாமல்
அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப
காலிப்பணியிட மதிப்பீட்டு அறிக்கையின்படி 15.03.2022 அன்றைய நிலவரப்படி இளநிலை
உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3 பதவியிலிருந்து பதவி உயர்வு
மூலம் உதவியாளர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் இவ்வாணையரக
11.03.2022 நாளிட்ட செயல்முறைகள் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.
அப்பட்டியலில் உள்ள பணியாளர்கள் 30.09.2022 அன்று காலை 10.00 மணியளவில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தயார் நிலையில் இருக்க
உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளும் எவ்வித புகாருக்கும் இடமளிக்கா
வண்ணம் கலந்தாய்வினை செவ்வனே நடத்தி அதன் அறிக்கையினை அனுப்பிவைக்குமாறு
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: படிவம் 1, 2, 3 மற்றும் 4.
பூ.ஆ.நரேஷ்
பெறுநர்
அனைத்து முதன்மைக்கல்விஅலுவலர்கள்.
நகல்
1. உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6.
2. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை -6.
இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை -6.
இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,
சென்னை -6.
S.V/15e:\e\B aection\44\83\52556.doGK
இணைஇயக்குநர் (பணியாளர்தொகுதி)
3.
4.
5.
இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்,
சென்னை -6.
6. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
சென்னை -6.
7. இவ்வாணையரக அ2 பிரிவிற்கு.
ஒம்/-
தகவலுக்காகப்
பணிந்தனுப்பப்படுகிறது
No comments:
Post a Comment