இயல் - 5 , கவிதைப்பேழை - நீதி வெண்பா
கற்கண்டு - வினா விடை வகைகள் , பொருள்கோள்
வினாக்களும் விடைகளும்
1) கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது ----- இலக்கியம்
அ ) சங்க இலக்கியம்
ஆ) பிற்கால இலக்கியம்
இ) பக்தி இலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
விடை : அ ) சங்க இலக்கியம்
2) தோண்டும் அளவு சுரக்கும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறிய நூல்
அ) நாலடியார்
ஆ) திருவாசகம்
இ) திருக்குறள்
ஈ) நான்மணிக்கடிகை
விடை : இ ) திருக்குறள்
3) " அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை " -என்று இவ்வடிகளில்
குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்
ஆ) அறிவியல்
இ) கல்வி
ஈ) இலக்கியம்
விடை : இ ) கல்வி
4) அருந்துணை என்பதைப்
பிரித்தால் -----
அ ) அருமை + துணை
ஆ) அரு + துணை
இ ) அருமை + இணை
ஈ) அரு + இணை
விடை : அ ) அருமை + துணை
5) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்
அ) ஆறுமுக நாவலர்
ஆ) சோமசுந்தர பாரதியார்
இ ) உமறுப்புலவர்
ஈ) செய்குதம்பிப்பாவலர்
விடை : ஈ ) செய்குதம்பிப் பாவலர்
6)சதம் என்றால் ------ என்று பொருள்
அ) பத்து
ஆ) நூறு
இ) இருநூறு
ஈ) நானூறு
விடை : ஆ ) நூறு
7) செய்குதம்பிப் பாவலர் ------மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ கன்னியாகுமரி
ஈ) தூத்துக்குடி
விடை : இ ) கன்னியாகுமரி
8) செய்குதம்பிப் பாவலர் உரை எழுதிய நூல்
அ) கந்த புராணம்
ஆ) சீறாப்புராணம்
இ) பெரிய புராணம்
ஈ) கருடபுராணம்
விடை : ஆ ) சீறாப்புராணம்
9) செய்குதம்பிப் பாவலர் ------- ஆம் ஆண்டில் சதாவதானி என்ற
பாராட்டைப் பெற்றார்.
அ) 1907
ஆ) 1917
இ) 1927
ஈ) 1947
விடை : அ ) 1907
10) வினா ------ வகைப்படும்
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) எட்டு
விடை : இ ) ஆறு
11) தான் விடை அறிந்திருந்தும் ,
அவ்விடை பிறருக்குத் தெரியுமா
என்பதை அறியும் பொருட்டு வினவுவது ----- வினா
அ) அறிவினா
ஆ) அறியா வினா
இ) ஐயவினா
ஈ) ஏவல் வினா
விடை : அ ) அறிவினா
12) இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவும் வினா
அ ) அறியா வினா
ஆ) ஐயவினா
இ) கொடை வினா
ஈ ) கொளல்வினா
விடை : ஆ ) ஐயவினா
13) விடையின் வகைகள் மொத்தம் -----
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஏழு
ஈ) எட்டு
விடை : ஈ ) எட்டு
14) சுட்டுவிடை , மறை விடை , நேர்விடை இவை மூன்றும் ----- விடைகள் ஆகும்.
அ) வெளிப்படை
ஆ) குறிப்பு
இ) தூண்டல்
ஈ) பொது
விடை : அ ) வெளிப்படை
15 ) ' கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் ' போவேன் ' என்று உடன்பட்டுக் கூறும் விடை
அ) சுட்டுவிடை
ஆ) மறைவிடை
இ) நேர் விடை
ஈ) ஏவல் விடை
விடை : இ ) நேர்விடை
16) " உனக்குக் கதை எழுதத்
தெரியுமா? " என்ற வினாவிற்குக் கட்டுரை எழுதத் தெரியும் என்று கூறுவது
-------- விடை
அ) நேர் விடை
ஆ) வின எதிர் வினாதல் விடை
இ) இனமொழி விடை
ஈ) உறுவது கூறல் விடை
விடை : இ ) இனமொழி விடை
17) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை
------- ஆகும்.
அ) வியங்கோள்
ஆ) பொருள்கோள்
இ) தொடர் அமைப்பு
ஈ) வரிசை அமைத்தல்
விடை : ஆ) பொருள்கோள்
18) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது ------- பொருள்கோள்.
அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
ஆ) மொழிமாற்றுப் பொருள்கோள்
இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்
விடை : ஈ ) நிரல்நிறைப்பொருள்கோள்
19 ) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு - இப்பாடல் ------
பொருள்கோளுக்குச் சான்றாகும்.
அ) நிரல் நிரைப் பொருள்கோள்
ஆ) தாப்பிசைப்பொருள்கோள்
இ) அளைமறிபாப்புப் பொருள்கோள்
ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
விடை : ஈ ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
20) இங்கு நகரப் பேருந்துகள்நிற்குமா? என்று வழிப்போக்கர்கேட்டது ------- வினா." அதோ அங்கே நிற்கும் " என்று மற்றொருவர் கூறியது ------ விடை
அ) ஐயவினா , வினா எதிர் வினாதல்
ஆ) அறிவினா , மறைவிடை
இ) அறியா வினா , சுட்டுவிடை
ஈ) கொளல்வினா , இனமொழி விடை
விடை : அறியா வினா , சுட்டுவிடை
No comments:
Post a Comment