மூளையை பாதிக்கும் காற்று மாசுபாடு 

நம்மால் உணவு, நீர் ஆகியவை இல்லாமல் பல மணி நேரம் உயிர் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஐந்து நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம், 16 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. 

வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்று மாசுபடுவதால் ஒரு வருடத்துக்கு 90 லட்சம் முதல் 120 லட்சம் பேர் வரை இறக்கிறார்கள். காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. 
காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றன, புதிய ஆய்வுகள். நமது மூக்கில் உள்ள ஆல்பாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது. நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாசுத்துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. 
இந்த துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டை பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்த துகள் நுரையீரலை சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளித்தள்ளுகிறோம். இந்த துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்பாக்டரி எபிதீலியம் வழியாகச்சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும். வாகனங்களிலிருந்து வரும் புகை, மாசுக்கட்டுப்பாட்டு அளவுக்குள் உள்ளதா என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். 
தெருவில் சேரும் குப்பைகளை தீமூட்டக்கூடாது. நம் வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் தொட்டிச்செடிகளை வளர்க்கலாம். துளசி, கற்றாழை, மஞ்சள், மணி ப்ளான்ட், ஓமவல்லி, புதினா ஆகிய சிறிய செடிகள் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வேப்பமரம், புங்கமரம் ஆகிய இரண்டையும் வளர்க்கலாம்.

Air pollution affects the brain

We can survive for hours without food or water. But it cannot last even five minutes without air. We breathe 22,000 times a day, inhaling and exhaling 16,000 times. The air we breathe is 78 percent nitrogen and 21 percent oxygen, and the remaining 1 percent is carbon monoxide, nitrogen oxide, sulfur oxide, ozone, methane, and many other gases.

Due to growing civilization, increase in vehicles and continuous operation of factories, air pollution is increasing. 90 lakh to 120 lakh people die every year due to air pollution. It is well known that air pollution causes lung disease. But the wind and the brain inside the cranium are closely related.

Air pollution also affects our brain, new research suggests. An organ called the olfactory epithelium in our nose helps us sense smell. This is what connects our brain to the air. When the air we inhale through our nose is mixed with pollution, the impact depends on the level of pollution. If the level of pollutants is high, the hair in our nose prevents the particles from entering.

If this drop is a little smaller it goes up to our throat area. But this particle does not reach the lungs and we exhale it through coughing and sneezing. This particle, if it is very fine, passes through the albacterial epithelium and gets deposited in the brain causing damage. Memory in the brain decreases and the brain loses its balance. Vehicle emissions should be checked every three months to ensure that they are within the pollution control limits.

Garbage on the street should not be set on fire. We can grow potted plants that purify the air in our home. Small plants like Tulsi, Aloe Vera, Turmeric, Money Plant, Omavalli, Mint are air purifying. Both neem tree and saffron tree can be grown.

♦️ஆசிரியர் தகுதித் தேர்வு - 2022 (QUESTIONS PAPERS) Paper - 1 க்கான மாதிரி வினாத்தாள்கள்


♦️Paper I மாதிரி வினாத்தாள்கள் 1


♦️Paper I மாதிரி வினாத்தாள்கள் 2


♦️Paper I மாதிரி வினாத்தாள்கள் 3


♦️Paper I மாதிரி வினாத்தாள்கள் 4


♦️Paper I மாதிரி வினாத்தாள்கள் 5


♦️Paper II மாதிரி வினாத்தாள்கள் 1


♦️Paper II மாதிரி வினாத்தாள்கள் 2


♦️Paper II மாதிரி வினாத்தாள்கள் - 3


♦️Paper II மாதிரி வினாத்தாள்கள் 4


♦️Paper II  மாதிரி வினாத்தாள்கள் 5

Post a Comment

Previous Post Next Post

Search here!