CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது!


CUET - UG முடிவுகள் :

இளநிலை கியூட் தேர்வு முடிவுகள் 
https://cuet.samarth.ac.in  என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

திருவாரூர் மத்திய பல்கலை (CUTN), திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை உள்பட, நாடு முழுதும் 50க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, 'கியூட்' ( CUET - Central Univercities Entrance Test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வு ஜூலையில் நடத்தப்பட்டது.

நாடு முழுதும் உள்ள, 54 மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வான, கியூட்டிற்கு, சென்ற ஏப்.2 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது.

மத்திய பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அந்தந்த நிறுவனங்கள் சார்பில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

சில நிறுவனங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தின.
இந்நிலையில், அனைத்து வகை மத்திய பல்கலைகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த, பொதுவான நுழைவு தேர்வு நடத்தப்படும் என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில், பொது நுழைவு தேர்வு கட்டாயம் என்று, கூறப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களை, cuet.samarth.ac.in/என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.




Post a Comment

Previous Post Next Post

Search here!