தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண். 57358 / அ1 / இ1 /2021 நாள்: 13.09.2022
பொருள்:
பார்வை:
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி மாவட்டக் கல்வி அலுவலர்
மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம்
நிரப்புதல் 2022-2023-ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப்
பட்டியல் தயாரித்தல் - அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள்
கூடுதலாக கோருதல் தொடர்பாக
இணைப்பு:
மின் அஞ்சல் மூலம்
பார்வை:
சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்
(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 57358 /அ1
/1/2021, br.18.07.2022
பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்
செயல்முறைகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்
கவனம் ஈர்க்கப்படுகிறது.
மேற்கண்ட செயல்முறைகளில், 2022-2023-ஆம் ஆண்டிற்கான
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல்
சார்ந்து தகுதி வாய்ந்த உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளித் தலைமை
ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் அனுப்பப்பட்டு விவரங்கள் கோரப்பட்டது.
தற்போது, இதன்தொடர்ச்சியாக கூடுதலாக அரசு உயர்நிலைப் பள்ளி /
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன்
இணைத்து அனுப்பப்படுகிறது.
பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள
அறிவுரைகளைப் பின்பற்றி, இணைப்பில் உள்ள அரசு உயர் /மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட
படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த தலைமையாசிரியர்களின் மந்தண
அறிக்கைகளுடன், 16.09.2022 அன்று நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து
முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பொருள் சார்ந்து தனிக் கவனம் மேற்கொண்டு, மறுநினைவூட்டிற்கு
இடமின்றி, உரிய நாளில் நேரில் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment