வகுப்பு 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு (SA) தேர்வு முறை மற்றும் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண். 2411 / ஈ2/2021. நாள்.12.09.2022. 

பொருள் : 

எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) 1 முதல் 3 ஆம் வகுப்பு, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்துதல்-சார்பு : 

பார்வை 

எண்ணும் எழுத்தும் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் வார ஆய்வுக் கூட்ட நாள் : 10.09.2022. 

எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ். ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது. பார்வையில் காணும் கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது. இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும், 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு (CD) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆகவே, இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022-க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

முதன்மைக் கல்வி பெறுநர் 2. 3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். நஷ் இயக்குநர் நகல் 1. அரசு முதன்மைச் செயலாளர். பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், hus 12/09/ சென்னை-09.தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. ஆணையர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-06. தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை-06. தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post

Search here!