1,2,3 ஆம் வகுப்புகளுக்கான Summative assessment ( தொகுத்தறி மதிப்பீடு) குறித்த சில கருத்துக்கள் ..
✍🏻முதல் பருவ தேர்வு SA இன்று முதல் 30.09.2022 வரை open இல் இருக்கும் ..
✍🏻 எண்ணும் எழுத்தும் திட்டம் அடிப்படையில் மூன்று பாடங்களுக்கு ( தமிழ் , ஆங்கிலம் , கணக்கு ) நடைபெறும் .
(சூழ்நிலையில் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் அறிவிப்பு இல்லை)
✍🏻 மொத்தம் 10 நாட்கள் தேர்வு காலம் உள்ளது மாணவர் எண்ணிக்க அதிகம் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர் விடுப்பு ( இன்பூயன்சா காய்ச்சல் பரவுவதால் விடுப்பு எடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளன. ) இதனை கருத்தில் கொண்டே 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது .
✍🏻 மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக இருக்கும் பள்ளிகள் ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற முறையில் தேர்வு மதிப்பீடு செய்யலாம் .. ( ஒரே நாளில் அனைத்து பாடங்களுக்கும் முடித்து விட வேண்டாம் இது சில அலுவலக சிக்கல் வரும் . நமது பணிக்கும் நல்லது .
✍🏻 மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகள் 2, 3 நாட்கள் ஒரு பாடம் என்ற முறையில் தேர்வு மதிப்பீடு செய்க.
( மாணவர் விடுப்பு எடுத்தால் அடுத்த நாள் அந்த மாணவர்களுக்கு மதிப்பீடு செய்க. )
வினாத்தாளில் சில கேள்விகள் எழுதி காட்டும் வகையில் இருக்கும் .. அவ்வாறான வினாக்கள் முறையாக ஒரு Note இல் ( சொல்வது எழுதுதல் note)
மாணவர்களை எழுத சொல்லி வைத்துக்கொள்ளலாம் . ( இதுவும் நமது நலன் சார்ந்தது ..)
✍🏻 இன்று தமிழ் தேர்வு மாணவர்கள் விடுப்பு எடுத்தால் நாளை ஆங்கில பாட தேர்வு செய்தாலும் இன்று வராத அந்த மாணவர்களுக்கு தமிழ் தேர்வு மதிப்பீடு செய்யலாம்.
இது இப்படி செய்தால் நமக்கு நன்மை பயக்கும் என்ற முறையின் என் தனிப்பட்ட கருத்து பரிமாற்றம் மட்டுமே ..
இதனை உங்கள் வகுப்பறை நிகழ்வுகள் ஏற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள் ..
புதிய பாடத்திட்டம் புதிய தேர்வு முறை
முதன்முதலில் இணையவழி தேர்வு மதிப்பீடு செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment