4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!-வினா - விடைகள்
PREPARED BY THULIRKALVI TEAM
பக்கம் - 11
வாங்க பேசலாம்
"பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?
விடை :
நான் கூறும் விடை :
பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன்.
சிந்திக்கலாமா?
நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?
விடை : சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.
பக்கம் - 12
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………
அ) பாய் + தோடும் ஆ) பாய்ந்து + ஓடும் இ) பயந்து + ஓடும் ஈ) பாய் + ஓடும்
விடை : ஆ) பாய்ந்து + ஓடும்
2. காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது……………….
அ) காலைப்பொழுது ஆ) காலைபொழுது இ) காலபொழுது ஈ) காலப்பொழுது
விடை : அ) காலைப்பொழுது
3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?……………………..
அ) மலை ஆ) காடு இ) நெகிழி ஈ) நிலம்
விடை : இ) நெகிழி
4. குனிந்து – இச்சொல் குறிக்கும் பொருள்……………………
அ) வியந்து ஆ) விரைந்து இ) துணிந்து ஈ) வளைந்து
விடை : ஈ) வளைந்து
5. தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………………………………..
அ) தன்னுடைய ஆ) தன்உடைய இ) தன்னுடைய ஈ) தன்உடையை
விடை : அ) தன்னுடைய
வினாக்களுக்கு விடையளிக்க
1. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை : நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன. உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன. மண் வளம் அழிக்கப்படுகிறது.
2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?
விடை : நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.
3. ‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்’ என இளமாறன் ஏன் கூறினான்?
விடை : இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார். அதற்கு இளமாறன் “யாருமே வயலுக்குப் போகவில்லை என்றால் என்னவாகும்?” என்று கேட்டான். “எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் விவசாயத்தை யார் செய்வது?” என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.
சொந்த நடையில் கூறுக
உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?
விடை : எனக்குப் பிடித்த காய்கள்
- கத்தரிக்காய்,
- வெண்டைக்காய்,
- அவரைக்காய்,
- பாகற்காய்,
- முள்ளங்கி,
- காரட்,
- பீன்ஸ்,
- உருளைக்கிழங்கு,
- பீட்ரூட்,
- பூசணிக்காய்,
- எல்லா வகையான கீரைகள்,
பழங்கள்
- அன்னாசிப்பழம்,
- கொய்யாப்பழம்,
- மாம்பழம்,
- திராட்சைப்பழம்,
- பப்பாளிப்பழம்
ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை. இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது.
பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.
பக்கம் - 13
அகரமுதலிப் பார்த்துப் பொருளறிக
மாசு – ………………………..
வேளாண்மை – ……………………
விடை : மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு
வேளாண்மை – உழவு
சொற்களை இணைத்துத் தொடரை நீடித்து எழுதுக
நிறுத்தக் குறியிடுக
1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.
2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
விடை : ‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.
3. ஆகா பயிர் அழகாக உள்ளதே
விடை : ஆகா, பயிர் அழகாக உள்ளதே!
4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது
விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?
புதிய சொற்களை உருவாக்கலாமா?
பக்கம் - 14
படத்தை பார்த்து விடுகதைகள் உருவாக்குக
அகர வரிசைப்படுத்துக:
No comments:
Post a Comment